பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலும் நோய்வாய்ப்பட்டுள்ள இந்தப் பூனைகளுக்கு அனுபவமிக்க டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்; தகுதிகள் மிக்க ஆஸ்பத்திரித் தாதிகள் அவற்றைக் குளிப்பாட்டுகின்றனர்; பிரஷ்ஷைக் கொண்டு வாளிப்பாகத் துடைத்து விடுகின்றனர்; அவற்றின் மீது சென்ட் தைலத்தையும் தெளிக்கின்றனர்; மேலும், கவனமிக்க வார்டு நர்சுகள் இந்த ஊதிப் பெருத்த நோயாளிகளுக்குச் சகலவிதமான இன்சுவைத் தின்பண்டங்களை யும் உணவாகக் கொடுக்கின்றனர்; இவற்றைக் காற்றாட வெளியே உலாவி வரக் கூட்டிச் செல்கின்றனர்; அவற்றைச் சகல விதத்திலும் செல்லமாகப் பேணி வளர்த்து வருகின்றனர். அதே சமயம், இந்த மாளிகைக்குக் கூப்பிடு தூரத்தில், பசியால் வாடும் குழந்தைகள், தமது குழிந்துபோன கண்களில் குழந்தைத் தன்மையற்ற நிராதரவான உணர்ச்சியோடு நம்மை வெறித்துப் பார்த்தவாறே, குப்பை கூளங்களைத் தோண்டி ஏதாவது உணவு கிடைக்காதா என்று தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதையும் மனிதத்தன்மை என்று கூறுவது? நமது பாஷையில், இது முற்றி லும் சீர்கெட்டுப்போன ஆத்மாக்களின் நீசத்தனம் என்றே கூறப்படுகிறது. மேலும், முதலாளித்துவவாதிகள் மனிதத் தன்மை என்ற இந்த உன்னதமான சொல்லைத் தமது அகராதி யிலிருந்தே நீக்கி வீசி எறிந்து விடட்டும்; ஏனெனில் மனித வேடம் தரித்த மிருகங்கள் பயன்படுத்துவதற்கான சொல் அல்ல தொழில் முறை எழுத்தாளனான் நான் இலக்கியத்தைப் பற்றிப் பேசத்தான் வேண்டும்; என்றாலும், உங்கள் அனைவரையும் போல் நான் முதலில் ஒரு கம்யூனிஸ்டாகவே இருக்கிறேன்; எனவே தான், பொதுவான கட்சி லட்சியத்தில் இலக்கியமும் ஒரு பகுதியேயாகும் என்பதை நான் ஒரு கணம் கூட மறந்துவிடவில்லை என்றபோதிலும், நம்மை மிகவும் அலைக்கழித்துக் கொண்டி ருக்கும் விஷயத்தைப்பற்றியே முதலில் பேசத் தொடங்கினேன். இதனை மேலும் விவரித்துக் கொண்டிராமல், இந்த நீண்ட முன்னுரைக்காக என்னை மன்னித்து விடுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இனி நான் இலக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறேன்...... மிகப் பல புத்தகங்கள் வெளிவரத்தான் செய்கின்றன; , என்றாலும் சொல்லப்போனால், அவை வெகுவிரைவிலேயே சந்த 1.டி.யின்றி அடங்கிப்போய் விடுகின்றன. காரணம்? காரணம் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம்: படைப்பின் மட்டமான தரத்துக்கும், வாசகர்களின் மிகவுயர்ந்த எதிர் பார்ப்புக்களுக்கும் இடையே நிலவிவரும் ஏற்றத்தாழ்வுதான்