பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகைக் கவலையும் பீதியும் கவ்விப் பிடித்துள்ளன. ஆனால் இங்கோ யாரோ ஒருவர் அனைவருக்கும் மன்னராட்சிவாதிகளி லிருந்து அராஜகவாதிகள்வரை அனைவருக்கும்-பத்திரிகைச் சுதந்திரத்தைப் பெற விரும்புகிறார். இது என்ன?-இது வெறும் அப்பாவித்தனமா அல்லது அப்பட்டமான வெட்கங்கெட்ட செயலா? இந்தச் சுதந்திர” வெறியர்கள் நமது இளைஞர்களைக் கெடுக்க முயல்கிறார் கள், கனவான்களே, நீங்கள் வீண் முயற்சி செய்கிறீர்கள்! ** சிரமம்யமா ன” இளம் எழுத்தாளர்களும் சரி, அல்லது * 'இரமமில்லாத இளம் , எழுத்தாளர்களும் ' சரி, உங்களோடு வரப்போவதில்லை. எங்களது தாயகத்தின் கவலை. களையும் இன்பங்களையும் அவர்கள் எங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளனர்; எங்களோடு பகிர்ந்து கொள்ளவும் போகின்றனர், மேலும், அவர்களில் எவர் ஒருவரையும் நாங்கள் உங்களிடம் ஒப்படைக்கவும் மாட்டோம். ', மாபெரும் தேசபக்தப் போரில் எழுத்தாளர்கள். ஆற்றிய பணியைப் பற்றி இங்கு பலர் - மிக நன்றாகப் பேசியுள்ளனர். சோவியத் ராணுவத்தின் அரசியல் நிர்வாகம் நம்மை முதலா வது ரிசெர்வ் படையில் வைத்துள்ளது என்றால் அது ஒன்றும் சும்மா அல்ல. நமது நாட்ட்ை அபாயம் அச்சுறுத்துமானால், நாம் மீண்டும் நமது ராணுவ யூனிபார்ம் உடைகளைத் தரித்துக் கொண்டு, நம்மில் முதியவர்களும், இளையவர்களும், "சிரம் மயமான வர்களும், "' சிரமமில்லாதவர்களுமான அனைவரும், நமது சொந்த சோவியத் ராணுவத்தின் அணிகளில் சேர்ந்து விடுவோம். ஏனெனில் நாங்கள் எங்களது மக்களின் சதையின் சதையாக ஒன்றுபட்டிருக்கிறோம்; அந்த மக்கள் போராடிப் பெற்ற சகலமும் எங்களுக்கு எல்லையற்றவிதத்தில் மதிப்பிடற் கரியவையாகும். - , . - :' ' முடி வுரையாக, நான் வருங்காலத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். நமது சமுதாயத்தில் நிகழ்ந்து வரும் மிகப்பெரும் - சமுதாய மாற்றங்களையெல்லாம் புலப் பலப்படுத்தக் கூடிய அளவுக்கு, வசன இலக்கியத்தில் நாவல் இலக்கிய வகை ஒன்றுதான் விளங்கி வருவதா.க, கான்ஸ்தாந்தின் ஃபெதின் கூறியதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். நாவல் - இலக்கியமானது ஒரு பெரிய திரைச் சீலையை விரித்து, அதன் மீது நமது நாட்டில் நிகழ்ந்து வரும் சம்பவங்களை, மக்களது மனோபாவத்திலும் கண்ணோட்டத்திலும் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் மாற்றங்களைச் சித்திரித்துக் காட்டவும், தமது. கதா