பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவர்; நமது மாபெரும் சமுதாயம் மேலும் அபிவிருத்தி காண் பதற்கான வருங்கால வாய்ப்புக்களை அவர்களே வகுக்கின்றனர். கூட்டுப் பண்ணை': இயக்கத்தைச் சேர்ந்த . முதுபெரும் பிரமுகர்களைப்பற்றி, இந்த மேடையில் எவ்வளவோ, விஷயங்கள் "கூறப்பட்டுள்ளன. என்னைத் தன்னடக்கமற்றவன் என்று தயவு செய்து எண்ணி விடாதீர்கள்; என்றாலும், , ' அந்த முதுபெரும் பிரமுகர்களின் வரிசையில் நானும் இடம் பெறுவேன்.; ஏனெனில் கூட்டுப் பண்ணை முறை பிறந்ததையும் அது வலுப் பட்டதையும் நான். கண்ணாரக் கண்டு வந்திருக்கிறேன். மேலும் இன்று, இந்த மண்டபத்தில், பல தலைமுறைகளைப் பிரதிநிதித் துவப்படுத்தும் சோவியத் விவசாய் வர்க்கத்தின் கண்மணிகள் பலர் கூடியிருப்பதை நான் காணும்போது, கடந்த நாற்பது ஆண்டுகளில் நமது சோவியத் கிராமப்புறங்கள் கடந்து வந்துள்ள , கீர்த்தி வாய்ந்த வரலாற்று மார்க்கத்தை நான் பெருமிதத்தோடு எண்ணிப் பார்க்கிறேன்; - இந்த மார்க்கத்தைத் துடிப்பான முறையிலும் தகுதியான முறையிலும், இலக்கியத்திலும் கலையிலும் சித்திரித்துக் ,, காட்ட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்கிறேன். எனது தொழில்முறைக், கட் மையானது, 'இலக்கியத்தைப் பற்றியும் சில வார்த்தைகள் கூறுமாறு என்னை: நிர்ப்பந்திக்கிறது, விஷயம் என்னவென்றால், ... பண்ணைத் தொழிலைப்போலவே, இலக்கியத் துறையிலும் அமோக அறுவடைகள் காணும் ஆண்டு களும், எதுவுமே. விளை யாத ஆண்டுகளும் உண்டு;, வறட்சிக் காலங்களும் தூசிப் புயல்களும் உண்டு. நீங்கள். உங்கள் பயிர் களைத் தாக்கும் பூச்சிகளை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி வருகிறீர்கள்; ஆனால், நான் இதனைச் சொல்வதற்கே வருத்தப் படுகிறேன்-எங்கள் மத்தியில், இன்னும் சில கொலொர்டோ வண்டுப் பூச்சிகள் இருந்து வரத்தான் செய்கின்றன; அத்தகைய வண்டுப் பூச்சிகள் சோவியத் ரொட்டியைத் தின்று வளர்ந் தாலும், தமது மேலை நாட்டு முதலாளித்துவ எஜமானர்களுக்கே சேவை செய்து வருகின்றன;. தமது எழுத்துக்களை. அவர்களுக்குக் “கள்ளத்தனமாகக் கடத்தி அனுப்பி வருகின்றன. ஆயினும், நீங்கள் உங்கள் வயல்களில் செய்து வருவதைப்போல், நாங்களும் எங்களது இலக்கியத் தோட்டங்களிலிருந்து எல்லாவிதமான பூச்சிகளையும் களைகளையும் தொலைத்துக் கட்ட மிகவும் ஆவலாக இருக்கிறோம்; அவற்றை நாங்கள் தொலைத்தும் கட்டுவோம். உற்பத்தி, விஷயத்திலும், எங்கள் நோக்கங்கள். உங்களது நோக்கங்களை ஒத்தவையேயாகும்;. அதாவது நல்ல, தரமிக்க , - சரக்குகளைப் போதிய அளவு உற்பத்தி செய்ய வேண்டும்