பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதே. நாங்கள் எப்போதுமே வெற்றி பெற்று விடுவதில்லைச் ஆயினும், நீங்களும் அப்படித்தானே.. மேலும், நீடித்த மதிப்புள்ள சரக்குகளை உற்பத்தி செய்யு மாடி எங்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது; ஆயினும் துர்ப்பாக்கிய வசமாக, எல்லாப் புத்தகங்களுமே காலத்தின் சோதனையில் வென்று நின்று நிலைத்துவிட முடிவதில்லை. ஆயினும், கிராம வாழ்க்கையைப்பற்றி நாங்கள் ஏற்கெனவே சில புத்தகங்களை உருவாக்கியுள்ளோம் என்பது ஒரு மகிழ்ச்சியூட்டும் உண்மை யாகும்; மேலும் நான் ஒரு கடைந்தெடுத்த நன்னம்பிக்கை வாதியாக இருக்கின்ற காரணத்தால், நமது காலத்தவர்களைப் பற்றிய பெரிய, புதிய நாவல்கள் இன்னும் எழுதப்படும் என்று முற்றிலும் திட நம்பிக்கை கொண்டிருக்கிறேன், - நாம் லே று சிலவற்றிலும் பொதுவான அக்கறையைக் கொண்டிருக்கிறோம்-நமது இளம் மக்களைக் கண்டு நாம் கொள்கின்ற இன்பமும் பெருமிதமும், அவர்கள் மீது நாம் வைக்கின்ற நம்பிக்கைகளும்தான் அவை. இளம் எழுத்தாளர்கள் மத்தியில், உண்மையிலேயே திறமை மிக்க நபர்கள் பலர் உள்ளனர்; முதலாவதாக, அவர்களிடமிருந்துதான் நாங்கள் முக்கியத்துவமும் முழுமையான மதிப்பும் வாய்ந்த படைப்புக் களை இயல்பாகவே எதிர்பார்க்கிறோம். முடிவாக ஒரு விஷயம். தோழர்களே, எனது நாட்டினரே, இந்த மாநாட்டின் பிரதிநிதிகளே, உங்களிடம் உண்மையைக் கூறப் புகுந்தால், இங்கு நான் உங்களைப் பார்க்கும்போது , இத்தகைய அற்புதமான மக்கள் மத்தியில் வாழ்வதற்குத்தான் நான் எத்தனை அதிருஷ்டசாலியாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். - " ஏன், இத்தகைய வலிமை மிக்க மக்களைக் கொண்டு, இத்தகைய வலிமை மிக்க கட்சியைக் கொண்டு, மலைகளையே அசைத்துவிட முடியும்! மேலும், அவசியம் நேர்கின்றபோது, நாம் உண்மையில் மலைகளை அசைக்கவும் செய்கிறோம், மலைகள் கிடக்கட்டும்; சாத்தானின் . கொம்புகளையும்கூட நம்மால் ஒடித்துவிட முடியும், 1945-ல் நாம் அவனது கொம்பு களை ஓடிக்கத்தான் செய்தோம். அவன் புதிய கொம்புகளை வளர்ப்பானானால், அவற்றையும் நாம் மீண்டும் முறிப்போம். இந்த நல்ல காரியத்தைச் .. செய்வதற்குப் போதுமான பலமும் திறமையும் நமக்குண்டு. . . . ' இந்தக் காங்கிரஸ் விரைவில் முடிவுறும். பிரிந்து போவதற்கு முன்னால், நமது மாபெரும்; பல-தேசிய இன சோவியத்