பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம் கம்யூனிஸ்டுக் கழகத்தின் 13- வது காங்கிரசுக்கு ஷோலகோவ் அனுப்பிய செய்தியில் ஒரு வசன கவிதைக்குப் பொருத்தமான ஒரு மணிக்குரல் குடிகொண்டுள்ளது; அது காம்சொமால்ஸ்காயா பிராவ்தாவில் வெளிவந்தது; இ ேத ா அதிலிருந்து ஒரு பகுதி: " கடந்து போய் விட்ட எனது சொந்த இளமைப் பருவமே! நமது நாட்டின், நமது கட்சியின் நியாயப்படுத்தப்பட்ட நம்பிக்கையே! உங்களது காங்கிரஸ் நடை பெறவிருக்கும் இந்தத் தருணத்தில் உங்களை வாழ்த்தவும், உங்களைத் தழுவி அரவணைக்கவும், எனது நாட்டின் பெருமிதமான நீங்கள் உங்கள் பணியிலும் படிப்பிலும், சொந்த வாழ்க்கையிலும் எல்லா வெற்றியும் மகிழ்ச்சியும் பெறவும் வாழ்த்துக் கூற 'என்னை அனுமதியுங்கள். கூட்டுப் பண்ணை விவசாயிகளது மூன்றாவது அகில- யூனியன் காங்கிரசில் தாம் ஆற்றிய உரையிலும் அதன் கடைசிப் பகுதியில் ஷோலகோவ் சோவியத் இளைஞர்களைத் நமது நாட்டின் நம்பிக்கையாகவும் பெருமிதமாகவும் மீண்டும் நறிப்பிட்டுப் பேசினார். இளம் எழுத்தாளர்கள் மத்தியில் பல உண்மையான திறமைசாலிகளைக் கண்டறியவேண்டும் என்றும், இயல்பாகவே அவர்களிடமிருந்து முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்களை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார், ஷோலகோவ் உலக நடப்புப்பற்றி எழுதிய எழுத்துக்களுக்கே உரிய தனித்த தன்மைகளைக் கருத்தில் கொண்டு, இந்தப் புத்தகம் வாழ்க்கை ', '* எழுத்தாளர், இளம் மக்கள்” என்ற தலைப்புக்களைக் கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. முதல் பகுதி இயல்பாகவே மிகவும் பரந்து பட்டதாக உள்ளது; இதற்கு இதன் கருப்பொருள் ரீதியான பெரும் நானாவிதத் தன்மை மட்டுமல்லாமல், எழுப்பப்பட்ட விஷயங்களின் ஜீவாதாரமான முக்கியத்துவமும் காரணமாகும். இந்தப் பகுதியை மேலும் பல பிரிவுகளாக, உதாரணமாக, படைப்பாக்கப் பணி,

  • 'போர் என்ற பிரிவுகளாகப் பிரிப்பதால் அனுகூலம் ஏதும்

விளையாது என்றே நாங்கள் முடிவு செய்தோம். இரண்டாம் பகுதி அளவிலும் இரண்டாவது இடத்தையே வகிக்கிறது, மூன்றாம் பகுதியில் இளம் மக்களுக்கு நேர்முகமாகக் கூறப்பட்ட அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட கட்டுரைகளும், சொற் பொழிவு களும், வாழ்த்துச் செய்திகளும் அடங்கியுள்ளன. இதிலுள்ள விஷயங்களை வெவ்வேறு பிரிவுகளாக

வழங்குவதன் மூலம் இந்தப் புத்தகத்தை வாசகர் பயன்படுத்திக்

40