பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோவோச்சேர்க்காஸ்க் தேர்தல் வட்டார வாக்காளர்களுக்கு ஆற்றிய உரையிலிருந்து ...நமது பத்திரிகைகளில் வெளிவந்துள்ள சுப்ரீம் சோவியத் வேட்பாளர்களது உரைகள் யாவும் ஒரு பெருமித உணர்வோடு ஒலிக்கின்றன; ஏனெனில் மக்கள் தமது நம்பிக்கையை உங்கள் மீது வைத்திருப்பதே ஒரு பெருமைக்குரிய விஷயமாகும். தோழர்களே, இதே உணர்ச்சிதான் என்னுள்ளும் நிரம்பி யுள்ளது. ஆயினும் என்னுள் இந்த நியாயமான உணர்ச்சி சொந்த மகிழ்ச்சியுணர்வோடும் கலந்திருக்கிறது. டான் பிரதேசத் தேர்தல் வட்டாரங்களில் ஒன்றே என்னை வேட்பாளனாக நியமித்துள்ளது என்பதே அதற்குக் காரணம். நான் டான் பிரதேசத்தில் தான் பிறந்தேன்; இங்குதான் வளர்ந்தேன்; இங்கு தான் பள்ளிக்குச் சென்றேன்;. இங்குதான் ஒரு மனிதனாகவும், எழுத்தாளனாகவும், மேலும் நமது மாபெரும் கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினராகவும் பரிபக்குவமடைந்தேன். மேலும், நமது மாபெரும் மகத்தான தாயகத்தின் ஒரு விசுவாச மிக்க புதல்வனாக இருந்து வரும் அதே சமயத்தில், எனது சொந்த டான் பிரதேசத்தின் தேசபக்தனாகவும், நான் இருக் கிறேன் என்பதை அறிவிப்பதில் நான் பெருமையடைகிறேன். தோழர்களே, உங்கள் நகரம் ஒரு பழமையான நகரம், அது பல தேசபக்தச் சொற்பொழிவுகளைக் கேட்டுள்ளது. உள் நாட்டு யுத்த ஆண்டுகளிலும் கூடத்தான். அந்த ஆண்டு களில் ஆட்டமன் கிராஸ்னோவும் மற்றும் பிற அரசியல் சூழ்ச்சிக் காரர்களும் இங்கு தமது தாயகத்தின்பால் தாம் கொண்டிருந்த அன்பைப் பற்றிப் பேசத்தான் செய்தனர்; அதே மூச்சில் அவர்கள் நமது டான் பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொள்ளு மாறு ஜெர்மானியர்களையும், அதன் பின் நேச நாட்டினர் எனக் கூறப்பட்ட ஆங்கிலேயர்களையும் பிரெஞ்சுக்காரர்களையும் இங்கு

அழைத்தனர். அவர்கள் தமது தேசபக்தியைப் பற்றிப் பேசினர்;

45