பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதே சமயத்தில் கோஸாக்குகளின் ரத்தத்தை அவர்கள் விலை சாட்டினர்; சோவியத் ஆட்சியையும் ரஷ்ய மக்களையும் எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான ஆயுதங்களுக்காக அதனைப் பண்டமாற்றுப் பொருளாக்கினர்.

வரலாறு மக்களை அவர்களது செயல்களைக் கொண்டுதான் சோதித்துப் பார்க்கிறது; அவர்களது சொற்களைக் கொண்டல்ல, தனது நாட்டின்பால் ஒரு மனிதன் கொண்டுள்637 அன்பின் அளவையும், அந்த அன்பு எந்த அளவுக்குத் தகுதியானது என்பதையும் வரலாறு சோதித்துப் பார்க்கிறது. கிராஸ்னேவும் ஏனைய சண்டாளர்களும் உண்மையான தேசபக்தி பற்றிய கருத்தையே இழிவு படுத்திவிட்டனர்; கறைப் படுத்திவிட்டனர். அவர்கள் உழைக்கும் கோஸாக் மக்களைத் துரோகத்தனமான முறையில் தவறான வழியில் செலுத்தி, அவர்களை உள்நாட்டுப் போரில் ஈடுபடுத்தினர்.

இன்றோ சோவியத் யூனியனைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் முழுவதும் நாட்டின் பால் தாம் கொண்டுள்ள அன்பைப் பற்றிப் பேசுகின்றனர்; அவர்கள் ஒவ்வொரு வரும் தமது உயிரையே பணயம் வைத்து அதன் எல்லைகளைப் பாதுகாக்கத் தயாராக உள்ளனர். பாசமிக்க ஒரு தாயின் பரிவோடு தன்னைப் பேணி வளர்த்துள்ள நாட்டின் பால் அன்பு செலுத்துவது ஒரு மனிதனின் புனிதமான கடமையாகும். நமது தாயகமோ, அதன் 17 கோடி உழைக்கும் மக்களின் புத்திர விசுவாசத்தைப்பெற்றுள்ளது.

ஏதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போராடிய ரஸீன்,புகசேவ் போன்ற அத்தகைய மாபெரும்: திளர்ச்சிக்காரர்களைத் தோற்றுவித்த கோஸாக்குகள், புரட்சி ஆண்டுகளின் போது ஜெனரல்களால் ஏமாற்றப்பட்டனர்; உழைக்கும் ரஷ்ய வெகு ஜனங்களுக்கு எதிரான சோ தரப் படுகொலைப் போரில் இழுத்து விடப்பட்டனர். கோஸாக்குகள் தமது தவற்றைப் புரிந்து கொண்டனர்; வெள்ளை எதிர்ப்புரட்சி இயக்கத்திலிருந்து வெளியேறினர்; இன்று அவர்கள் போல்ஷிவிக் கட்சியின் வழி காட்டலின் கீழ் தமது புதிய மகிழ்ச்சிமிக்க வாழ்க்கையைக் கட்டியமைத்து வருகின்றனர்.

போல் ஷிவிக் கட்சியின் முயற்சிகளும், நமது பல்-தேசியச் இன உழைக்கும் மக்களது முயற்சிகளும் வறுவாய்ப் பட்டிருந்த நமது நாட்டை ஒரு செல்வ வளமிக்க நாடாக மாற்றியுள்ளன, நாம் கனரகத் தொழில் துறையையும் சோஷலிச

விவசாயத் துறையையும் கட்டியமைத்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நாம் நமது பொருளாதார ஆற்றல் வளத்தை அதிகரித்து வருகிறோம்.

46