பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தார். என்ற இம் கடிவாளத்தை மட்டும் அவர் கை நழுவ விட்டு விடவே இல்லை. ' உங்கள் பண்ணையில் நிலைமைகள் எவ்வாறு உள்ளன. முதியவர்களான கோஸாக்குகள் இந்தப் போரைப் பற்றி என்ன கூறுகிறார்கள்? என்று நான் அவரிடம் கேட்டேன்.

    • நல்லது. நாங்கள் வைக்கோல் போர் போடுவதை

முடித்து விட்டு, பின்னர் ரை தானியத்தையும், கோதுமையை யும் அறுவடை செய்வதே சரியாகவும் முறையாகவும் இருக்கும் என்று தீர்மானித்தோம். என்றாலும், செஞ்சேனைக்கு நாங்கள் அதற்கும் முன்பே அவசியமானால், எந்த நேரத்திலும் வரத் தயாராயிருக்கிறோம். ந ர ங் க ள் இல்லாமலே பெண்கள் சமாளித்துக் கொள்வார்கள், அவசியம். நேர்ந்தால், டிராக்டர் களையும், அறுவடைக் கம்பைன் எந்திரங்களையும் எவ்வாறு கையாள்வது என்பதையும் நாங்கள் அவர் களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும், சோவியத் ஆட்சியும் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்குத் தூங்குவதற்கே நேரம் கிடையாது என்று குறும்பாகக் கண்ணைச் சிமிட்டியவாறே கூறினார் அவர்;

  • 'நிச்சயமாக இங்கு, இந்த ஸ்டெப்பி வெளியில் வசிப்பது மிகவும்

அமைதியாகத் தான் உள்ளது. என்றாலும் கோஸாக்குகள் என்றுமே அமைதியான வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருந்தது. கிடையாது; வேறொருவர் மு து A ன் பின்னால் மறைந்து கொள்ளவும் அவர்கள் என்றுமே முயன்றதும் இல்லை. இந்தப் போரில் நாங்கள் மகிழ்ச்சியோடு போரிடுவோம். இந்த அவிசாரி மகன் ஹிட்லர் விஷயத்தில் மக்கள் வெறி பிடித்தவர் களாகத்தான் உள்ளனர். ஆமாம். அவனுக்கு என்னதான் நேர்ந்து விட்டது? அவன் போருக்காகத் துடியாய்த் துடித்துச் சாகிறானா அல்லது வேறு காரணம் இருக்குமா? அவர் அமைதியாக மேய்ந்து கொண்டிருந்த தம் குதிரையை ஓரக் கண்ணால் அடிக்கடி பார்த்தவறே, தமது சிகரெட்டை மெளனமாகப் புகைத்துக் கொண்டிருந்தார். சென்ற ஞாயிற்றுக் கிழமையன்று நான் போரைப் பற்றிக் கேள்விப்பட்டபோது, என்னுள்ளே என்னென்னவோ எண்ணங்கள் தோன்றின” என்று எதையோ நினைவு கூரும் தொனியில் மீண்டும் பேசத் தொடங்கினார் : அன்றிரவு என்னால் தூ ங் க வே முடியவில்லை. சென்ற ஆண்டில் கொலொரடோ வண்டுப்பூச்சி நம்மைத் தாக்கியது , இந்த ஆண்டில் ஹிட்லர் தாக்குகிறான் என்பதை எண்ணிப் பார்த்த,

வாறே நான் படுத்திருந்தேன். எப்போதும் ஏதாவதொரு

51