பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் எழுந்து நின்றார்-பகைமையுணர்வினால் மேலும் பிர காசமாகவும் மேலும் இளமைமிக்கதாகவும் திடீரென்று தோன்றிய கண்களைக் கொண்ட பெரிய, மெலிந்த மனிதனாக- அவர் எழுந்து நின்றார். போரின் இரண்டாவது நாளன்று வாஷ்சயர்யேவ்ஸ்கி கூட்டுப் பண்ணையில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் குழந்தையும் வேலைக்கு வந்து விட்டனர், வேலையிலிருந்து வெகு காலத்துக்கு முன்பே ஓய்வளிக்கப்பட்டு விட்ட மிகவும் முதியவர்களும் கூடத் தம்மால் முடிந்த வேலையைச் செய்ய முன் வந்து விட்டனர், கதிரடிக்கும் களத்து மேட்டைச் சுத்தம் செய்யும் . வேலை முழுவதும் முதியவர்களான கிழவர்களுக்கும், கிழவிகளுக்குமே ஒதுக்கிவிடப்பட்டது. முதுமைப் பருவத்தினால் உண்மையிலேயே பூசணம் பிடித்தவர் போல் தோன்றிய ஒரு படுகிழவர், தமது நடுநடுங்கும் சால்களை அகல விரித்து வைத்தவாறு ஒரு பெஞ்சின் மீது அமர்ந்து , அந்தக் களத்து மேட்டை ஒரு மண்வெட்டியினால் சுரண்டிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார், “தாத்தா, ஏன் உட்கார்ந்து கொண்டு வேலை செய் கிறீர்கள்? என்று கேட்டேன் நான் . << என் முதுகு வளைந்து கொடுக்காது. மகனே, மேலும் உட்கார்ந்திருப்பதால் நான் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கிறேன். அங்கிருந்த முதிய மா தர்களில் ஒருவர் அவரிடம் இவ்வாறு கூறினார் : ** நீங்கள் ஏன் வீட்டுக்குப் போகக் கூடாது? நீங்கள் இல்லாமலே நாங்கள் சமாளித்துக் கொள்வோமே. * * இதைக் கேட்டதும் அந்தப் படுகிழவர் தமது ஒளியற்ற, குழந்தைத் தன்மைமிக்க கண்களை உயர்த்தினார்; அந்த மாதை நோக்கிக் கடுகடுப்போடு இவ்வாறு கூறினார்; "எனது பேரப் பிள்ளைகள் மூவர் இந்தப் போரில் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே என்னால் முடிந்த மட்டும் எந்த வழியிலாவது அவர்களுக்கு நான் உதவத்தான் வேண்டும், மேலும் எனக்குப் போதனை செய்கிற அளவுக்கு உனக்கொன்றும் அத்தனை வயது வந்து விடவில்லை, என் வயது உனக்கு வரும் வரையிலும் பொறுத்திரு. அப்புறம் நீ விரும்பு வதையெல்லாம் எனக்குப் போதனை செய்!' டான் கோ ஸாக்குகளின் இதயங்களில் இரண்டு உணர்ச்சிகள் வாழ்ந்து வருகின்றன : தமது தாயகத்தின்பால் அன்பு, நாஜிப்

படையெடுப்பாளர்கள்மீது பகைமை என்பனவே அவை, அவர்

55