பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களது அன்பு என்றென்றும் வாழ்ந்து வரும்; ஆயினும் அவர்களது பகைமையுணர்வு, எதிரி முற்றிலும் முறியடிக்கப்படும் வரை 'யிலும் இருந்து வரட்டும், மக்களது கோபாவேசத்தின் கொடிய சீற்றத்தையும் இந்தப் பகைமையையும் கிளறி விட்டுள்ளவர்கள் அழிந்தொழிக. 1941 கோஸாக் கூட்டுப் பண்ணைகள் எல்லையற்ற டான் பிரதேசத்து வயல்களில் அறுவடை முழு 'வேகத்தோடு நடந்து கொண்டிருந்தது. டிராக்டர்கள் கண கணத்து முழங்கின; அறுவடை எந்திரங்களிலிருந்து எழும் மெல்லிய நீலநிறப் புகை ரை தானியக் கதிரின் வெண்ணிறத் தூசியோடு கலந்தது. நெடிய கனத்த ரை தானியக் கதிரைத் தமது இறக்கைகளால் அடித்துக் கசக்கிக் கொண் டி.ருந்த அரியும் கருவிகள் விர்ரென்று சுழன்று கொண்டிருந்தன. பார்வைக்கு இது அமைதி தவழும் காட்சியாகவே தோன்றியது; எனினும் எல்லாவற்றின் மீதும் போரின் கொடிய முத்திரை பதிந் திருந்தது. மக்களும் எந்திரங்களும் வழக்கத்திலிருந்து 1.மாறு பட்ட வேகத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருந்தனர். வேலையின் வேககதி முன்னைக் காட்டிலும் மேலும் விரைவாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. மந்தைகளிலிருந்து அங்கு கொண்டு வரப்பட்டிருந்த செம் பொன்னிறம் படைத்த ட. சின் குதிரைகள் கிராமச் சதுக்கத்திலிருந்த தாம்புக் கொட்டில்களில் கனைத்துக் கொண் டிருந்தன. சூரிய வெப்பத்தால் காய்ந்து கறுத்திருந்த இளம் குதிரைக்காரர்கள் நிறம் மங்கிட்;.ே:: ன" குதிரைப்படைத் தொப்பிகளைத் தரித்தவர்களாய், படைக்குப் பதிவு செய்யும் நிலையங்களை நோக்கித் தமது குதிரைகளை ஓட்டிச் சென்றனர்; வயலில் கதிர்த்தாள்களைக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்த மாதர்கள் நிமிர்ந்து நின்று, அவர்களை நோக்கித் தமது கையை வெகு நேரம் ஆட்டியவர்களாய் இவ்வாறு சத்த மிட்டனர் : “கோலாக்குகளே, பத்திரமாக நல்ல ஆரோக்க: 2:த் தோடு திரும்பி வாருங்கள்! அதிருஷ்டம் உங்கள் பக்கம் இருக் கட்டும். நாஜி விரியன் பாம்புகளை அடித்துக் கொல்லுங்கள்! டான் பிரதேசத்தின் ஆழ்ந்த மரி பாதை வணக்கங்களை புத்யோன்னிக்குத் தெரிவியுங்கள்!” - புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானி மூட்டைகளை உயரமாகப் பாரம் ஏற்றி வைக்கப்பட்டதும், வசந்த பருவத்து

வெங்காயங்களைப்போல் பசுமை மிக்கதும், மழைத் துளியின்

56