பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Fஈரமே 'படாததுமான அற்புதமான வைக்கோல் ,மலைகள் கம்பீர மாக, ஆடி வருவதுமான சாரீசாரியான வண்டிகள், தானியக் கொள்முதல் கிட்டங்கியை நோக்கிச் செல்லும் சாலைகளில் வந்து கொண்டிருந்தன. செஞ்சேனைக்கு எல்லாமே தேவைப்பட்டன; மேலும் எல்லாமே செஞ்சேனைக்காகச் செய்து வரப்பட்டன. மக்கள் அனைவரின் சிந்தனைகளும் அங்கேதான், போர் முனையில்" தான் இருந்தன. மேலும் எல்லா இதயங்களும் ஒரே விருப்பத் தோடுதான் துடித்துக் கொண்டிருந்தன ; நாஜி விரியன் பாம்பின் முதுகெலும்பைக் கூடிய விரைவில் முறித்தாக வேண்டும். ஒரு முதிய விவசாயி தமது கைகளில் ஒரு கோதுமைக் கதிரை வைத்துக் கசக்கியபடி புன்னகை புரிந்தவாறு நின்று கொண்டிருந்தார், நமது நேச நாடுகளாக மாறியுள்ள இங்கிலாந்தும் மற்றும் பிற சாமர்த்தியம் மிக்க நாடுகளும் இருக்கட்டும், இயற்கைத் தாயே நமக்கு ஆதரவாகவும், ஹிட்லருக்கு எதிராகவும்தான் இருக்கிறார். இந்த ஆண்டின் அறுவடையைத்தான் பாருங் களேன். இது கற்பனைக் கதையில் நிகழ்ந்தது போல் இருக்கிறது; கோதுமைத் தண்டுகள் தூண்களைப்போல் அத்தனை கன.மாக வளர்கின்றன ; உருளைக் கிழங்குகளோ வண்டிச் சக்கரங்களின் அளவுக்குப் பெரிதாக உள்ளன, கோதுமை, சூரியகாந்தி, சாகம் முதலியவற்றின் வசந்தகாலப் பயிருக்கு மழை தேவைப், பட்டது; மழையும் அறுவடைக் காலத்துக்கு முன்னால் சரியான வேளையில் பெய்து விட்டது! இந்தப் பயிர்கள் யாவும் புண்பட்ட கண்களுக்கு ஒரு விருந்தாகவே உள்ளன. எல்லாமே நமது நன்மைக்குத்தான்." போல்ஷிவித்ஸ்கி நிர்ணய விலைக் கூட்டுப் பண்ணையில், நான் அறுவடைக் கம்பைன் எந்திர ஆபரேட்டரான பியோதர். ஜெலென்கோ வுடன் பேசினேன். தாம் அறுவடை செய்திருந்த முதல் ஹெக்டர் நிலத்திலேயே உங்கள் எடைக்கு 2,8 டன்கள் விளைச்சல் கண்டுள்ளது எனக் கூறினார் அவர், முக்கியமானது. என்னவென்றால், இந்தத் தானியத்தில் ஈரப் பதமும் கணிசமா " அளவுக்குக் குறைவாகவே உள்ளது; அத்துடன் இதில் கலப்பட தானியம் எதுவும் கிஞ்சித்தும் தென்படவில்லை. சில இடங்களில் ஒரு ஹெக்டரில் மூன்று அல்லது மூன்றரை டன் அளவுக்குக்கூட விளைச்சல் கண்டிருந்தது. ஜெலென்கோல் எந்திரத்தை ஓட்டிக் கொண்டே அதில், சேகரிக்கப்பட்டிருந்த தானியத்தை வெளியே கொட்டினார்; எனவே அவர் நிற்கும் வரையிலும் - நான் , சற்றுக் காத்துக்

கொண் டிருக்க வேண்டியிருந்தது. இந்தக் குறுகிய ஓய்வு நேரத் .

57