பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெலென்கோல் மீண்டும் தமது கம்பைன் எந்திரத்திடம் விரைந்து சென்றார்; வெட்டிப் பேச்சில் பொழுதை வீணாக்க அவருக்கு நேரமில்லை, ரை தானியம் பயிர் செய்யப்பட்டிருந்த அந்தப் பண்ணையின் 540 ஹெக்டர் நிலப்பரப்பில் 4 17 ஹெக் டர்கள் அரிவாள்களால் ஏற்கெனவே அறுவடை செய்யப்பட்டு விட்டன; இழந்து விட்ட நேரத்தை ஈடுசெய்வதற்கு அவர் துடியாய்த் துடித்தார், அந்த ஆண்டில் ராஸ்தாவ் பிரதேசத்தைச் சேர்ந்த மிகப் பெரும்பாலான கூட்டுப் பண்ணைகளில் மிகமிகச் சாதாரணமான அரிவாள்களே பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அறுவடைக் கம்பைன் எந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்வதற்குப் போதுமான அளவுக்குத் தானியங்கள் முற்றும் வரையிலும் காத்துக் கொண்டிராமல், சாதாரணக் கருக்கரிவாள்களைக் கொண்டே. அவர்கள் அறுவடை வேலையைத் தொடங்கி விட்டனர்; இதன் மூலம் அறுவடைக் காரியங்களையம் பெரிதும் துரிதப்படுத்தினர்; எரிபொருளையும் பெருமளவுக்கு மிச்சப் படுத் தினர், ஸ்டாலினேத்ஸ் கூட்டுப் பண்ணையைச் சேர்ந்த நபர் களில் ஒருவர் இது விஷயமாக இவ்வாறு கூறினார்: கூட்டுப் பண்ணைகள் தொடங்கப்பட்டவுடனேயே வியர்வை வழியப் பாடு படுவதை நாங்கள் நிறுத்தி விட்டோம். முதுகை ஒடிக்கும் உழைப்பிலிருந்து எங்களை சோவியத் ஆட்சி விடுவித்தது , இன்றே அரிவாள்களைக் கொண்டு வேலை செய்யும் இந்த இள வட்டப் பிள்ளைகள், முதுகு வலிக்கிறது என்று குறைப்பட்டுக் கொள்ளாமல் ஒரு நாள் கூட வேலை பார்க்க முடியவில்லை. அத்தனை தூரம் கொழுத்துப் போய்விட்டார்கள் அவர்கள். எங்களுக்காrக டிராக்டர்கள் நிலத்தை உழுவதும், அறுவடைக் கம்பைன் எந்திரங்கள் அறுவடை செய்வதும், கதிரடிப்பதும் சமாதான காலத்தில் மிகவும் நல்லதாகத்தான் இருந்தது. அதனால் நாஜிகள் நம்மோடு இந்தப் போரைத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், நமது முதுகைப்பற்றிக் கவலைப்படுவ தற்கு நேரமே கிடையாது. இப்போது வேலை செய்ய வேண்டிய முறையெல்லாம் நமது உடம்பின் ஒவ்வொரு மூட்டும் அதனால் முடிந்த வேலையைச் செய்யுமாறு செய்வதும், இங்கு நமக்குத் தேவைப்படுவதைக் காட்டி.லும் செஞ்சேனைக்கு மிகவும் தேவைப் படும் எரிபொருள் அனைத்தையும் நம்மால் முடிந்த வரையிலும் அதற்கு மிச்சம் பிடித்துக் கொடுப்பது மேயாகும். நாஜிகளின் மூட்டுக்கள் சட சடவென்று சொடுக்கு விடுவதோடு மட்டு

மல்லாமல், அவை முறிந்து வெளியே வரத் தொடங்கும்

59