பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்காதீர்கள். அப்பா! அது உங்கள் வேலையல்ல' என்று பதிலுக்குக் கடிதம் எழுதி விட்டான். அந்தப் பேரேட்டுப் பதிவாளர் இதனை மகிழ்ச்சி பொங்கும் புன்னகையோடுதான் கூறினார்: ராணுவ விதிமுறைகள் எல்லாம் அவனுக்குத் தெரிந் திருக்கிறது என்பதுதானே இதற்கு அர்த்தம். உள்நாட்டுப் போரில் நானும்கூடத்தான் போரிட்டேன், முதலில் நான் வடக்கில் போரிட்டேன், பின்னர் பஸ்மாஸ் கொள்ளைக் கும்பல்களையும், மற்றும் ஏனைய எல்லா ரகமான எதிரிகளையும் எதிர்த்துப் போராடினேன். இப்போது நான் ஊர்காவல் படையில் இருந்து வருகிறேன். இங்கு கிராமத்தில் எங்களில் சுமார் நூறு பேர் இந்தப் படையில் இருக்கிறோம். இங்கு இப் போது எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது. பாருங்களேன், இங்கு , பின்னணியில்கூட எத்தனையோ இளைஞர்கள் உள்ளனர். அதாவது நாங்கள் நூறு பேரும் அணி வகுத்து நிற்கும்போது, எங்களில் முதியவர்கள் மத்தியிலும் கூட, ஒரு போர்க்களப் பீரங்கியை இழுத்துச் செல்லக் கூடிய அளவுக்கு வலிமை படைத்த பல இளவட்டப் பிள்ளைகளும் தென்படுகின்றனர், அவர் களுக்குப் பொலி குதிரைகளின் பலம் உள்ளது. ஆமாம். உண்மை யாகத்தான். அவர்கள் தம்மைத் தொண்டர் படைக்காகப் பதிவு செய்து கொண்டுள்ளனர். என்றாலும் என்ன காரணத் தினாலோ இன்னும் அவர்களுக்கு அழைப்பு வரவில்லை. இதற்கு அர்த்தம் நம்மிடம் ஒரு மிகப் பெரிய ராணுவம் இருக்கிறது என்பதுதான். இதனைப் பற்றி நினைத்துப் பார்ப்பதே மனத்துக்குச் சுகமாக இருக்கிறது. இரண்டாம் நம்பர் கோஷ்டி அரியும் கருவிகளோடு அறு வடையை நடத்திக் கொண்டிருந்தது. ஒவ்வோர் அரிகம் கருவியும் இரண்டு ஜோடி எருதுகளோடு சேர்த்துப் பிணைக்கப் பட்டிருந்தது. அந்தக் கருவியின் இறக்கைகளை எவ்வளவு உயரத்துக்கு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயரத்துக்கு உயர்த்தியிருந்த போதிலும் கூட, அறுப்பு வேலை மிகவும் கடின மாகத்தான் நடைபெற்றது. ஏனெனில் ரை தானியப் பயிர்கள் அத்தனை உயரமா கவும், கனமாகவும் வளர்ந்திருந்தன. எருதுகளை ஓட்டும் பெண் கள் அந்தப் பிராணிகளைச் சத்தம் போட்டும், - சாட்டையடி கொடுத்தும் முடுக்கிக் கொண்டிருந்தனர்; கவர்முள் கம்புகளைச் சுழற்றி வேலை செய்து கொண்டிருந்த முரட்டு இளைஞர்களான கோஸாக்குகளும் கூட, தமது முகத்தில் வழிந்தோடும் வியர்வையைத் துடைக்க ஒரு வினாடியைக் கூட ஒதுக்க முடியாத அளவுக்கு, ஓடியோடி வேலை செய்து கொண்டி ருந்தனர். இறுதியாக அவர்கள் வேலையை முடித்து நின்றதும்,

s -

62