பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீசத்தனம் போர்க்களத்திலுள்ள ராணுவத்திடமிருந்து இவ்வாறு செய்தி வந்துள்ளது: யெல்னியா கிராமத்துக்கு அருகே கடுமை யான போர் நடந்து வந்தது. ஜெர்மானியர்கள் வீடுகளின் முன்னால் தடை மதில்களைக் கட்டியமைத்து, அவற்றை மூடி மறைத்து, நெடுநேரமாகச் சுட்டுக் கொண்டிருந்தனர். நமது யூனிட் தாக்குதலைத் தொடங்கியவுடன், நாஜிகள் கிராமத்தி லிருந்த பெண்டு பிள்ளைகள் அத்தனை பேரையும் விரட்டிக் கொண்டு வந்து, அவர்களைத் தமது பதுங்கு குழிகளுக்கு (முன்னால் நிறுத்தி வைத்துக் கொண்டனர்....' ' . தைரியமும் கெளரவமும் மிக்க வேர்கள் என்று நாஜி' ரேடியோவினால் போற்றிப் புகழப்பட்ட ஹிட்லர் ராணுவத்தின் போர் வீரர்கள்தான் இந்தக் காரியத்தைச் செய்தனர். அவர்களது' கெனரவம் போன்றதொரு * 'கெளரவம்”, குடலைப் புரட்டும் அழுகிய முடை நாற்றத்தைத்தான் தோற்றுவிக்கிறது. மேலும் இவ்வாறும் நம்மால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை; இந்தப் போர் வீரர்கள் உயிர் பிழைத்துத் திரும்பிச் சென்றால், இவர்கள் தமது தாய்மார்களையும், மனைவிமார்களையும், சகோதரிகளையும் நேர் நின்று நோக்கக் கூசமாட்டார்களா என்ன ? போர் வீரர்களின் உள்ளத்தில் எல்லா மனித உணர்ச்சி களையும் அழித்தொழித்து, அந்த உயிருள்ள ஜீவன்களை மனிதத் தன்மையற்ற, காட்டுமிராண்டித்தனமான காரியங்களைப் புரியும்' தானியங்கி எந்திரங்களாக - மாற்றியுள்ள அளவுக்கு, நாஜிகளின் கருத்துருவேற்றம் அத்தனை மும்முரமாக முழுமை பாக நடைபெற்றிருக்கத்தான் வேண்டும். ' . , - யெல்னியாவில் நாஜிகள் புரிந்த இந்தச் செயலை, கோய பல் ஸின் பாஷையில் எப்படிக் கூறுவார்கள், ராணுவ மதியூகம் என்று கூறுவார்களா அல்லது - ஜெர்மானியச் சாதுரியத் திறமை என்று கூறுவார்களா என்பது எனக்குத் தெரியாது; ஆனால் உலகின் நாகரிகமடைந்த நாடுகள் அனைத்தின் பாஷையிலும், இத்தகைய ஒரு செயல், ஒரு போர்வீரனுக்கு, இழிவைத் தேடித் தரும் இந்தச் செயல், ஒரு நீசத்தனம் என்றே கூறப்பட்டுள்ளது; எப்போதும் கூறப்படும், . . . , -- இந்தப் புதிய நாஜி அக்கிரமத்தைப் பற்றிக் கேள்விப்படும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உணர்வு, ஜெர்மானிய மக்களுக் காக வெட்கப்..டும். உணர்வாகவும், நிராயுதபாணிகளான

சிவிலியன் மக்களுக்குப் பின்னால் இழிவான' முறையில் மறைந்து

65