பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது தோழர்களும் நானும், புட்போர்டில் நின்றுகொண்டு வானின்மேலே நோட்டம் பார்க்கும் பணியை ஒருவர் பின் ஒருவராக ஏற்றுக்கொண்டோம், ' ஆ யி னு ம் ஜெர்மன் விமானங்கள் எதுவும் தென்படவில்லை; எனவே நாங்கள் எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் சென்று கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட காடுகளே இல்லாத ஸ்டெப்பி வெளி - வாசி யான எனக்கு ஸ்மோலென்ஸ்க் பிரதேசத்தின் இயற்கைக் காட்சி அன்னியமானதாகத் தோன்றியது ; அந்த இயற்கைக் காட்சி என் முன் விரிய விரிய நான் அதனைக் குறுகுறுப்புணர் வோடு பார்த்து வந்தேன். ரோட்டின் இரு மருங்கிலும் பைன் மரக்காடுகள் ஒரு சுவரைப்போல் வளர்ந்தோங்கியிருந்தன; அவற்றிலிருந்து குளுமையான காற்றும், காரமான, கீலெண் ணெய் வாடை.. போன்ற, மணமும் வந்தன. அந்த நடுப்பகலி லும்கூட அந்தக் காடுகள் அந்தியொளி மயக்கத்தில் மூழ்கி யிருந்தன; அவற்றின் இருண்ட அமைதியில் ஏதோ அபாயம் குடிகொண்டிருப்பதுபோல் தோன்றியது ; நெடிய மலைப்பூண்டுச் செடிகளும், அழுகிக் கொண்டிருக்கும் அடிமரக் கட்டைகளும் நிரம்பியிருந்த அந்த நிலமே என் மீது பகைமை பாராட்டுவது போல் தோன்றியது. ஆங்காங்கே வெட்டவெளிப் பிரதேசங்கள் இருந்தன; அவையும் மிகக் குறைவாகவும், ஒன்றுக்கொன்று வெகு தொலைவி “லும்தான் இருந்தன. அவற்றிலும் பெர்ச்மரக் கன்றுகளும், ஆஸ்பென் மரக் கன்றுகளும் பரவலாகத் தலை தூக்கியிருந்தன. திடீரென்று, சிவந்த சிறுபழங்கள் மலிந்த ரோவான் புதர் ஒன்று சூரிய ஒளியில் பளிச்சிடும்; அதன்பின் மீண்டும் காடுகள் ரோட்டின் இருபுறத்திலும் சுற்றி வளைக்கத் தொடங்கி விடும், மர உச்சிகளுக்கிடையே தோன்றும் இடைவெளி வழியாக, நாங்கள் எண்ணற்ற போர்வீரர்களின் சூட்சுகளால் மிதித்து நசுக்கப்பட்ட ரை அல்லது ஓட்ஸ் தானியக் கதிர்களைக் கொண்ட குன்றுச் சரிவான வயல் ஒன்றைப் பார்ப்போம்; அப்போது தூரத்திலுள்ள ஒரு சரிவின்மீது ஜெர்மனியர்களால் தரை மட்டமாகச் சுட்டுப் பொசுக்கப்பட்ட ஒரு கிராமத்தின் கரிந்து போன மிச்சம் மிஞ்சாடிகள் காட்சியளிக்கும், . நாங்கள் ஒரு கிராமப்புறச் சாலை வழியாகத் திரும்பினோம்; சில நாட்களுக்கு முன்பு வரையிலும் ஜெர்மானியர்கள் வசத்தில் இருந்ததும், சமீபத்தில் நடந்த மூர்க்கமான் போரின் வடுத் களைத் தாங்கிக் கொண்டிருந்ததுமான ஒரு வட்டாரத்தின் வழியே காரைச் செலுத்திச் சென்றோம். அந்த நிலப்பரப்பு

முழுவதும் பீரங்கிக் குண்டுகள், கண்ணி வெடிகள், வெடி

67