பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிருந்தன; அதனை விட்டுச் செல்வதற்கு அவை அவசரப்படவே இல்லை. பக்கத்து வீதிகள் ஒன் றில் ஒரு சிறு நாய் தனது வாலை யாட்டிக் கொண் டே எங்களை நோக்கி நகர்ந்து வந்தது. அது அத்தனை சுயமரியாதை படைத்ததாகத் தோன்றவில்லை; என் றாலும், அது தனது துணிவையெல்லாம் திரட்டிக்கொண்டு, காட்டிலிருந்து தன்னந்தனியாக இந்த இடத்துக்கு வந்திருந்தது; ஏனெனில் இந்த இடம்தான் அது வழக்கமாக வசித்து வந்த இடமாகும். கிராமத்தின் எல்லையோரத்திலிருந்த அவுரிச்செடி வயலில், நாங்கள் ஒரு குருவிக் கூட்டத்தைத் திடுக்கிடச் செய்து விட்டோம், அவை சமாதான காலத்தில் நாங்கள் பார்த்துப் பழக்கப்பட்டிருந்த குதூகலத்தோடும், சுறு சுறுப்போடும் கீச்சிட்டுத் திரியும் குருவிகளைப் போல் இருக்கவே இல்லை. அவை மிகவும் மௌனமான, பரிதாபகரமான பிறவிகள். அவை இடிபாடுகளின் மீது சிறிது நேரம் வட்டமிட்டுப் பறந்துவிட்டு, பின்னர் திரும்பி வந்து, நிராதரவான, கலக்கமடைந்த பார்வையோடு, அவுரிச் செடித் தண்டுகளின் மீது அமர்ந்தன. உள் ளூரைச் சேர்ந்த விவசாயிப் பெண்களும், தமது வாழ்க்கையைக் கழித்த அந்த இடத்துக்கு , ஏதோ ஒரு சக்தி தம்மைப் பலமாக இழுப்பதுபோல் உணர்ந்தனர் என்பதையும் கூறத்தான் வேண்டும், ஆடவர் கள் போருக்குச் சென்று " விட்டனர்; ஜெர்மானியர்கள் வந்தபோது பெண்களும், பிள்ளை களும் அருகிலுள்ள காடுகளிற் சென்று ஒளிந்து கொண்டனர். இப்போது அவர்கள் தமது ஊருக்குள் திரும்பி வந்து, நிராசை உணர்வோடு இடிபாடுகளுக்கிடையே அலைந்து திரிந்தனர்; தமது ' வீட்டுப் பொருள்களில் ஏதேனும் அழியாது மிஞ்சியிருந்து கிடைத்து விடாதா என்று இடிபாடுகளைத் தோண்டிக் கிளறிப் பார்த்தனர். இரவில் அவர்கள் மீண்டும் காட்டுக்குத் திரும்பிச் சென்றனர்; அங்கு ரிசெர்வ் துருப்புக்களைச் சேர்ந்த போர் வீரர்கள் அவர்களுக்கு ரொட்டியையும், படைப்பிரிவின் . பானையில் காய்ச்சிய சூப்பையும் வழங்கினர்; மறுநாள் காலையில் அவர்களும், நாசமாகிவிட்ட தமது கூடுகளையே வட்டமிட்டு வரும் பறவைகளைப்போல், நாசமாகிவிட்ட கிராமங்களுக்கு மீண்டும் வந்தனர். தரைமட்டமாக எரித்துப் பொசுக்கப்பட்டிருந்த அண்டையி லிருந்த மற்றொரு கிராமத்திலும், அழியாது பிழைத்திருக்கக் கூடிய உடைமைப் பொருள்களை சாம்பல் குவியல்களைக் கிளறித் தேடுவ தில், சிறு பிள்ளைகள் தமது தாய்மார்களுக்கு உதவிக்

கொண்டிருப்பதை நான் கண்டேன்.'

71