பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த லெப்டினென்ட் விரைவிலேயே தமது ஆழ்ந்த இளம் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார். தூங்க முயன்றும் தூங்க முடியாத நானோ, அந்த பதினைந்து நிமிட நேரத்தில், மிகவும் அருகில் வெடித்து வந்த ஜெர்மன் குண்டுகளுக்குப் பழகிப் போக முடியாது சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். நடு நிசி வரையிலும் நான் தூங்கவேயில்லை. ஆயினும் நான் தூங்கத் தொடங்கியபோதோ மரக்கட்டை போலத் தூங்கினேன் ; அதன்பின் தமது கனரகப் பீரங்கிகளின் சங்கீதத்தால் அவர்கள் எங்களுக்கு வேடிக்கை காட்டி மகிழ்வித்ததையோ அல்லது எங்களது பீரங்கிப் படை அவற்றுக்குப் பதிலளித்து வந்ததையோ நான் கேட்கவே இல்லை. பொழுது விடி,வதற்குச் சற்று முன்னால், எனக்கு இடதுபுறம் படுத்திருந்த மனிதரால் நான் விழித்தெழுந்து விட்டேன், 'அவர் அப்படியே குளிரால் விறைத்துப் போய் விட்டார்; ஏனெனில் அவர் மீது கிடந்த அவரது கம்பளிக் கோட்டு கீழே நழுவி விழுந்து விட்டது. அவர் ஒரு நாய் நடு நடுங்கிக் கொண் டிருப்பது மாதிரி அத்தனை வெடவெடென்று நடுங்கிக் கொண் டிருந்தார்; இதனால்தான் நான் யாரோ உலுக்கி எழுப்புவதாக நினைத்துக் கொண்டு விட்டேன் என்றாலும் அவரோ தொடர்ந்து தூங்கிக் கொண்டுதான் இருந்தார். நாங்கள் கூடாரத்தைவிட்டு வெளிவந்தோம். அதிகாலைப் பனிமூட்டம் காட்டின் மீது தணிந்து இறங்கியிருந்தது. போர் , வீரர்கள் இடுப்பு வரையிலும் உடைகளைக் களைந்து விட்டுத் தமது உடம்பை பனிக்குளிர்மிக்க நீரினால் கழுவித் துடைத்து விட்டுக் கொண்டனர்.இதனை ஏற்கெனவே செய்து முடித்து விட்ட இருவர் உடம்பில் சூடேறுவதற்காகக் குஸ்தி விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். இதனை அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன்தான் செய்தனர் என்பது, அவர்களில் ஒருவரது நெற்றியில் வியர்வை துளிகள் பூத்திருந்ததிலிருந்தும், மற்றொருவரின் முகமும் கழுத்தும், சிவந்து கனிந்து போய் விட்டதிலிருந்தும் தெரிய வந்தது. இறைச்சியோடு கூடிய சூடான சூப், டப்பாவில் பதனம். செய்யப்பட்ட பன்றிக்கறி, தே நீர் ஆகியவற்றோடு நாங்கள் நல்லதொரு ராணுவக் காலையுணவை வயிறார உண்டோம். அன்போடு எங்களை உபசரித்த அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு, நாங்கள் எங்கள் வழியில் புறப்பட்டுச் சென்றோம். நமது கனரகப் பீரங்கிப் படை, தான் சுடத்தொடங்கு வதற்கரன நிலைகளை மாற்றிக் கொண்டிருந்தது. விரைவாகச் செல் லும் இழுவை-டிராக்டர்கள் கம்பீரமாகத் தோன்றும்

நீண்ட குழாய்களைக் கொண்ட பீரங்கி களை இழுத்துக் கொண்டு,

75