பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்படுத்தாமல், காயமடைந்த லெப்டினென்ட் ஒருவரை, போர்க்களத்திலிருந்து பத்திரமான இடத்துக்குச் சுமந்து சென்றார். போர் முடிவதற்கு முன் அவர் இன்னும் பல வீரச் செயல்களைப் புரிவார் என்பது நிச்சயம், சமையற்காரரும் போர் வீரருமான அனதோலி நெத்ஜெல்ஸ்கி இவ்வாறு ஓர் இரட்டை. வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பதுங்கு குழிகளிலிருந்து அவர். தமது சமையற்கட்டுக்கு ஓடி வருவார்; அநேகமாக அவர் அவ்வாறு வரும்போது, சூப் வற்றி ஆவியாகப் போயிருக்கும்; இறைச்சியும் நிலக்கரியைப்போல் க று த் து க் கருகிப் போயிருக்கும். அல்லது மீண்டும் அவர் குப்பைத் தயார் செய்து கொண்டிருப்பார்; இந்த நேரம் பார்த்து, திடீரென்று வெடி குண்டுகளின் இடி முழக்கத்தினூடே, ரஷ்ய மொழியில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் மாபெரும் கலகலப்போசை அவருக்குக் . கேட்கும், அந்தச் சமயத்தில் தமது இதயமும், ஆன்மாவும் எந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததோ, அந்தத் தாக்குதலில் தாம் பங்கெடுக்கவில்லையே என்று நினைந்து அவர் வருந்துவார்: அத்தகைய சமயங்களில் அவர் ஏதோ. நினைவாகப் பானைக்குள் உப்புக்குப் பதிலாகச் சர்க்கரையைக் கொட்டி விடுவார்; அல்லது மிளகுக்குப் பதிலாகப் பாதாம் பருப்புக்களை அரைத்து விடுவார். எவ்வாறாயினும், இவ்வாறுதான் நடக்க முடியும் என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். என்றாலும், என்ன தான் இருந்தாலும், இது அந்த ஜெனரலுக்கும் அவரது சமையற்காரருக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒரு சொந்த விஷயமேயாகும். அவர்களுக்குத் தான் அது நன்கு தெரியும் என்பதும் உண்மைதான். 1943 செஞ்சேனை வீரர்கள் ஜெனரல் கோஸ்லோவ் எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு, ஸ்தலத்துக்குச் சென்று தாக்குதலைக் கவனிப்பதற்காகத் தமது யூனிட்டுகள் ஒன்றுக்குச் சென்றுவிட்டார், நாங்கள் அவருக்கு அதிருஷ்டம் வாய்க்கட்டும் என்று நல்வாழ்த்துக் கூறினோம்; என்றாலும், எங்களது வாழ்த்துக்கள் இல்லாவிட்டாலும்கூட, ஒரு விவசாயியின் கூரிய விவேகத்தையும், ஒரு போர் வீரனின் பிடிவாதத்தையும் கொண்ட, முன்யோசனையும் அனுபவமும் மிக்க, இந்த விவசாயி-ஜெனரலுக்கு எதிராக அதிருஷ்டமும் கூடச்சென்றுவிட முடியாது' என்பது சர்வ நிச்சயமென்றே தோன்றியது.

நான் நிலவறையைவிட்டு வெளியே வந்தேன். நமது

82