பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேர்கின்ற காரணத்தால்தான், அவரது கைகளில் தோல் உரிந்திருந்தது என்று நான் ஊகித்துக் கொண்டேன். அவரது சட்டையிலும் கால்சராயிலும் பச்சை நிறக் கறை படிந்திருந்தது. ஆயினும் அவரது இயல்பான தோற்றமே மிக நன்றாக இருந்தது; அதாவது இலையுதிர் காலத்தின் வாடிய பச்சைப் புல்லின் மீது அவர் குப்புறப் படுத்துக் கிடந்தால், ஐந்தடி தூரத்திலிருந்தும்கூட நீங்கள் அவரைக் கண்டுகொள்ள முடியாது, அவர் தமது கதையைச் சாவதானமாகச் சொல்லத் தொடங்கினார்; பேசும்போதே அவர் ஒரு புல்லிதழைத் தமது வலுவான பற்களால் கடித்துக் கொண்டேயிருந்தார்; 4 • நான் முதலில் ஒரு எந்திரத் துப்பாக்கி வீரனாகத்தான் இருந்தேன். ஜெர்மானியர்கள் எங்கள் படைப்பிரிவைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு விட்டார்கள். நாங்கள் எந்தத் திசை வழியே தப்பிச் செல்ல முயன்றாலும் அங்கெல்லாம் அவர்கள் இருந்தனர், அப்போது எனது நண்பன் ஒருவன் அவனும் துப்பாக்கி வீரன் தான்-தான் போய் வேவு பார்த்து விட்டு வர முன் வந்தான். நானும் அவனோடு சென்றேன், நாங்கள் மோட்டார் கார்ப் பாதைக்கு ஊர்ந்து சென்று, அங்கு ஒரு பாலத்துக்கு அருகில் பம்மியிருந்தோம். நாங்கள் அங்கேயே நெடுநேரம் பம்மிக் கிடந்தோம். எங்களைக் கடந்து சென்ற ஜெர்மன் லாரிகளை நாங்கள் எண்ணிக் கணக்கெடுத்தோம்; அவற்றில் என்னென்ன சாமான்கள் சென்றன என்றும் எழுதி வைத்துக் கொண்டோம், பிறகு ஒரு பயணிகள் கார் அங்கு வந்தது; அது பாலத்துக்கருகில் வந்து நின்றது. உயரமான தொப்பியும் நெடிய உயரமும் கொண்ட ஒரு ஜெர்மன் அதிகாரி அதிலிருந்து இறங்கினான். அவன் போர்க்களத் தொலை பேசியைத் தேடிப்பிடித்து, தனது காருக்கடியில் சென்று, அங்கு படுத்துக் கொண்டு தொலைபேசியில் பேசினான். அவனோடு யாரும் வருகிறார் களா என்று கண்காணித்துக் கொண்டிருக்க இருபோர் வீரர்களும் வந்திருந்தனர். காரின் டிரைவர் அவனது ஸ்தானத்தில் காரின் சக்கரத்தைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான். எனது நண்பன் -அவன் ஒரு ராட்சசப் பயல்!-என்னை நோக்கிக் கண்ணடித் தான்; கையால் எறியும் வெடிகுண்டு ஒன்றையும் வெளியே எடுத்தான். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் இருவரும் முழங்கைகளை ஊன்றி எழுந்தோம்; இருவரும் குண்டுகளை ஒரே சமயத்தில் வீசியெறிந்தோம். நாங்கள் அந்த நான்கு ஜெர்மானி! யர்களையும் கொன்று அந்தக் காரையும் நாசமாக்கி விட்டோம். பின்னர் இறந்துபோன அந்த மனிதர்களிடம் ஓடிச்சென்று,

அதிகாரியின் தோளில் தொங்கிக் கொண் டிருந்த, வரைபடப்

88