இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
அறிந்தவரை உலக இலக்கியங்களில் இதற்கு இணையான இரங்கற் கவிதை எதுவும் இல்லை” என தெரிவித்தார். கலைஞர் அவர்கள் தீட்டிய கட்டுரைகள் புதினங்கள் காவியங்கள், கவிதைகள் எல்லாம் தற்போது ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. கலைஞர் அவர்கள் இயற்றிய "இதயத்தைத் தந்திடு அண்ணா" என்ற இரங்கற் கவிதை ஒன்றுக்காகவே அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழா செப்டம்பர் 15-ஆம் நாள் (15.9.2008) தொடங்குகின்றது. அந்த விழா தொடக்க நாளில் என் எளிய அன்புப் பரிசாக கலைஞர் அவர்களின் “இதயத்தை தந்திடு அண்ணா என்ற இரங்கற் கவிதையை அச்சிட்டு வழங்குவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். சென்னை -20 15.9.2008 தங்கள் அன்புள்ள குறிஞ்சி சுப்ரமணியன் 00