இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
இதயத்தைத் தந்திடு அண்ணா (9.2.1969 அன்று சென்னை வானொலியில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்குக் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அளித்த கண்ணீர்க் கவிதாஞ்சலி) பூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம் அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம்! அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் - மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்- விழிமலர்கள் வேலாகும், வாளாகும் தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால்! கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது; கை மலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை! அம்மலரே எதிரிகளை மன்னித்து நெற்கதிர் போல் தலை நாணச் செய்துவிடும்! மக்களாட்சி மலர் குலுங்க சமதர்மப்பூ மணக்க தாய்மொழி தமிழே வாழ்வுப் பொழிலாக ஆடிவரும் தென்றல், நாடிவரும் பூமுடியே! புகழ் முடியே! உமைத் 11