________________
பாடி நின்றேன் இன்று அவலப் புரணி பாடுகின்றேன்...! கவியினில் பொருளெனக் கரும்பினில் சுவையெனக் கதிரினில் ஒளியெனக் காவினில் மலரென நிலவினில் குளிரென நிலமிசை வளமெனக் குலவிடும் அருவி குழறிடும் மொழியென உலவிடும் காற்றில் ஏறிடும் இசையென அலையெழுங் கடலில் ஆடிடும் நுரையெனக் கலைமணங் கமழக் கூடிய கவிஞர் தலைமகன் அண்ணா திருப்புகழ் பாடிட நிலமகள் வடிக்கும் கண்ணீர் அந்தோ! வெள்ளம்! வெள்ளம்! மாபெரும் வெள்ளம்! ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து எட்டாம் தாயகத்தில் மொழிப் புரட்சி தோன்றுதற்கு வித்திட்டார் சிலபேர் என்றால்: ஈரோட்டு நாயகத்தின் இணையில்லாத் தலைமை வீரர் எங்களண்ணன் களம் புகுந்தார் காஞ்சி பூண்டு! இரு மூன்று திங்கள் வரை சிறையில் வாடி, தரும் ஊன்றுகோலாகத் தமிழைத் தந்து அரு மூன்று எழுத்தாலே அண்ணாவானார்... அன்றொரு நாள் அய்ம்பத்திரண்டுதனில் சென்னையிலே சொன்னேனே நினைவுண்டா உங்களுக்கு? 13