பக்கம்:இதயத்தைத் தந்திடு அண்ணா.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தனித்தனித் தாய் ஈன்றெடுத்த தம்பிகளே! என அழைத்துக் கனிச் சுவையாய்க் கற்கண்டாய்த் தேன் பாகாய் அன்பு காட்டிப் பனிமலர் வீழ் தும்பியதாய்த் தழுவிக் கொண்டார். சொலல் வல்லார் சேதுப் பிள்ளைதனைச் சோமசுந்தர பாரதியைச் சொற் போரில் சொக்க வைத்தார் - பாவம்; சிக்க வைத்தார்! நீதிக் கட்சியென்று நெடியமதில் சுவருக்குள்ளே - பணச் சாதிக்குக் கட்சியாய் இருத்தலாகாதெனும் கொள்கையாலே - அதனை வீதிக்குக் கொண்டு வந்தார்! வீசிடுக வெள்ளையர்கள் பட்டத்தையென்று சேலத்து மாநாட்டில் தீர்மானம் போட்டுவிட்டார் அண்ணாவின் போர்க் கோலத்தை எதிர்க்க மாட்டாமல் கோலற்ற குருடர் போலக் கொள்கையற்றோர் வீழ்ந்து போனார்! தீரர் அண்ணா திராவிடர் கழகமெனும் பெயர் மாற்றத் தீர்மானம் வீரர் கூடிய மாநாட்டில் கொண்டு வந்தார்! அண்ணல் காந்தியார் அறவழி கண்டு ஆங்கில ஆட்சியை அகற்றியபோது துன்ப நாளென்றும் பெரியார் அறிக்கையை மறுத்துத் தொடங்கினார் போரை! இன்ப நாளிது! இனிய நாளிது! என்பு தோலாய் ஆன இந்தியர் அன்புறு காந்தியின் அருளால் இன்று 16