பக்கம்:இதயத்தைத் தந்திடு அண்ணா.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுந்தனர் அடிமைத் தளையினை அறுத்து! முழங்குவோம் விடுதலை முரசினை எடுத்து என்றே அண்ணா, அன்றே சொன்னார்... அன்று முதல் அண்ணன் - அய்யா - உறவினிலே கீறல் விழ அது நாற்பத்தொன்பதாம் ஆண்டினிலே பிரிவாய்மாறி முகில் கிழித்து வெளிக் கிளம்பும் முழு மதியாய் முன்னேற்றக் கழகத்தை முகிழ்க்கச் செய்தார்! தலைவருடன் கூடி வாழ முடியாமல் பெரும்பான்மைத் தோழருடன் வெளியே வந்தவுடன், நிலைகுலையா நம் அண்ணா அன்று சொன்னார் அது - நேற்றுச் சொன்னது போல் இருக்குதம்மா! தலைவரில்லை முன்னேற்றக் கழகத்துக்கு - என் தலைவர் இருந்த நாற்காலி, காலியாக இருக்கும்! அதில் தலைவர் அவர் என்றேனும் வந்தமர்வார்.. அதுவரையில் காத்திருப்பேன் என்றார். பூத்திருக்கும் மலர்த் தோட்டம் காலைப் பனிநீர் வடிப்பது போல் காத்திருந்து கூட்டம் கேட்டோர் கண்ணீர் வடித்தார் கண்ணீர்த் துளிகளே! நாட்டின் கண்மணிகளே! என அழைத்துச் செந்நீர் சிந்துதற்கு அணிவகுத்தார்! யாரேனும் கேட்டதுண்டா? 17