பக்கம்:இதயத்தைத் தந்திடு அண்ணா.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தங்கமாக ஆக்க' என்றாள். 'இன்றென்ன ஆயிற்' றென்றான். குன்றனைய மொழிக்கு ஆபத்தென்றாள்; சென்றமையக் குடில் இல்லை ஏழைக்கென்றான்; கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல் கொன்றெறியும் கோல் ஓங்கிற்றென்றாள்; அறிவில் கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள் அழுத கண்ணைத் துடைத்தவாறு அமுத மொழி வள்ளுவனும் அம்மா நான் எங்கே பிறப்பதென்றான்; தொழுத மகன் உச்சிமோந்து ஆல விழுதனைய கைகளாலே.. அணைத்துக் கொண்டு உழுத வயல் நாற்றின்றிக் காயாது. இனிமேலே என எண்ணி மனமகிழும் உழவன் போல் உள்ளமெல்லாம் பூரிப்புத் துள்ளி எழ காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே! நீ காஞ்சியிலே பிறந்திடுக! என்றாள். பிறந்திட்டான் நம் அண்ணனாக; அறிவு மன்னனாக பொதிகை மலைத் தென்றலாய்ப் போதாகி மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்ப் பதிகத்துப் பொருளாய்ப் 21