________________
பழந்தமிழர் புறப்பாட்டாய் வந்துதித்தான் அண்ணன் - கீழ் வானுதித்த கதிர்போல அவன் புகழைப் பாடுதற்கு அவன் வளர்த்த தம்பி நானும் அவன் தந்த தமிழ் எடுத்து இவண் வந்தேன் இதுதான் உண்மை - தலைவரென்பார், தத்துவமேதை என்பார், நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார் சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார் மனிதரென்பார், மாணிக்கமென்பார், மாநிலத்து அமைச்சரென்பார். அன்னையென்பார், அருமொழிக் காவல் என்பார், அரசியல்வாதி என்பார் – அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் - நெஞ்சத்து அன்பாலே 'அண்ணா' என்ற ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே - அவர் அன்னை பெயரும் தந்தார் அந்த அன்னைக் குலம் போற்றுதற்கு ஔவைக்கோர் சிலை அறம் வளர்த்த கண்ணகிக்கோர் சிலை வளையாத நெஞ்சப் பாரதிக்கும், வணங்காமுடிப் பாரதிதாசருக்கும் சிலை வீரமா முனிவருக்கும் சிலை கால்டுவெல் போப்புக்கும் சிலை கம்பர்க்கும் சிலை 22 22