பக்கம்:இதயத்தைத் தந்திடு அண்ணா.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஜீன் 23 அன்று தொடங்கி, ஜீன் 27வரை 5நாட்கள் கோவையில் நடைபெறுகின்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை உலகத் தமிழ்ச் வலம்மொழி மாநாடு சிறப்பிக்கும் வகையில் தமிழ் இனத்தின் தலைவர் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்! உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம்! போரைப் புறம் தள்ளி பொருளை பொதுவாக்கவே அமைதி வழிகாட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும் செம்மொழியான நம் தமிழ் மொழியாம்! அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனிய மொழி ஓதி வளரும் உயிரான உலகமொழி - நம்மொழி - நம்மொழி - அதுவே செம்மொழி - செம்மொழி - நம் தமிழ்மொழியாம்! வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே! தீட்டியுள்ள கவிதை ! ODD- கலைஞரின் கவிதையை அச்சிட்டு எளிய அன்பளிப்பாக வழங்குபவர் குறிஞ்சி சுப்ரமணியன் உரிமையாளர், குறிஞ்சி பர்னிச்சர் 14,வீட்டு வசதி வாரிய வணிக வளாகம் 48, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சாலை (எல்.பி.ரோடு), அடையாறு, சென்னை - 600 020 தொலைபேசி: 24919944. 24902541.24902544