________________
பல்வேறு இசைத் துறையினரையும், அறிவியல் அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களிடமிருந்து தொடங்கி, அறிவியல் அறிஞர்களையும், கல்வியாளர்களையும், பத்திரிகையாளர்களையும் பதிப்பகத் துறையினரையும், பெண்கள் இயக்கத் தலைவர்களையும், சமயத் தவைர்களையும், அய்ஏஎஸ் அதிகாரிகளையும், காவல்துறை அதிகாரிகளையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் சந்தித்து தந்தை பெரியார் அவர்களின் “பெண் ஏன் அடிமையானாள்” என்ற புத்தகத்தையும், பேரறிஞர் அண்ணா அவர்களின் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" (சந்திரமோகன்) என்ற புத்தகத்தையும், என் கல்லூரித் தோழர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களின் "விதை போல் விழுந்தவன்" "முத்தமிழின் முகவரி" "பித்தன்" ஆலாபனை முதலிய புத்தகங் களையும் வழங்கினேன். சென்னையில் வசிக்கின்ற முக்கிய பிரமுகர்கள் நூற்றுக்கணக்கான வர்களை நேரில் சந்தித்து இந்தப் புத்தகங்களை வழங்கி உரையாடி மகிழ்ந்தேன். இவ்வாறாக நான் சந்தித்த பெரியவர்களில் சாகித்ய அகாதமி தேர்வுக் குழு உறுப்பினராக இருந்த இந்திரா பார்த்தசாரதி அவர்களும் ஒருவர். அவர், கவிக்கோ அப்துல் ரகுமானின் "ஆலாபனை' கவிதை நூலுக்கு 1999-ஆம் ஆண்டின் கவிதை நூலுக்கான சாகித்ய அகாதமி விருது பெற முயற்சிகள் மேற்கொண்டார். அந்த ஆண்டு "ஆலாபனை” கவிதை நூலுக்கு சாகித்ய அகாதமி விருது 50 ஆண்டுகளுக்குப் பின்னால் - தமிழ்க் கவிதை நூலுக்கு வழங்கப்பட்டது. தமிழ்க் கவிதை நூலுக்கு 50 ஆண்டுகளுக்குப் பின்னால் சாகித்ய அகாதமி விருது வழங்கப் பெற நான் ஒரு கருவியாக இருந்தேன் என்பதில் மிகவும் பெருமையடைகின்றேன். ஆலாபனை கவிதை நூலின் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதன்பின் தொடர்ந்து 8 ஆண்டுகளாக தமிழ்க் கவிதை நூலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகின்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 9.2.1969 அன்று வானொலியில் தமிழக முதல்வர் கலைஞர் 6