________________
அவர்கள் இயற்றிப் பாடிய "இதயத்தைத் தந்திடு அண்ணா" என்ற இரங்கற் கவிதையை என் எளிய அன்புப் பரிசாக அச்சிட்டு வழங்குகிறேன். உலக வரலாற்றிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அரசியல் தலைவன். 1946ஆம் ஆண்டிலிருந்து 1976ஆம் ஆண்டு வரை 80 கோடி மக்களை ஒரு குடைக்கீழ் கட்டியாண்ட செஞ்சீனத்தின் புரட்சித் தலைவன் மாசேதுங். மாசேதுங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சீனத்தின் தலைநகர் பீகிங்கில் தியான்மெக் சதுக்கத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தை விட பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த பெரும் கூட்டம் 15 லட்சம் மக்கள் கடல் அலையென சென்னையிலே திரண்டனர். உலக வரலாற்றில் எந்தத் தனி மனிதன் சாவுக்கும் இவ்வளவு பெருங்கூட்டம் சேர்ந்ததில்லை. இந்தச் செய்தி கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றது. உலகம் உள்ளளவும் பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள் கடலைப் போல் மற்றொரு மனிதனின் சாவுக்கு மக்கள் திரள்வார்கள் என்பது மிகமிக அய்யத்திற்கு உரிய ஒன்றே. பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்னையில் கடல் அலையென திரண்ட அந்த மக்கள் கூட்டத்தில் நானும் ஒருவன். எதையும் கண்டு கலங்காத தந்தை பெரியார் அவர்களே கலைஞர் பாடிய அந்த இரங்கற் கவிதையை கேட்டு கண்ணீர் வடித்தார் என்றால். மற்றைய அறிஞர் அண்ணாவின் தம்பிமார்களெல்லாம் மழை மழையாக கண்ணீரைக் கொட்டினார்கள் - சிந்தினார்கள் அவர்களிலே நானும் ஒருவன். என் கல்லூரித் தோழர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தமிழ் இலக்கியங்களெல்லாம் கற்றுத் தேர்ந்தவர் என்பதோடு அரபுமொழி, உருதுமொழி, ஆங்கில மொழி இலக்கியங்களையெல்லாம் கற்றுத் தேர்ந்தவர். அவரிடம் "கலைஞர் அவர்கள் இயற்றிய இரங்கற் கவிதை உலக இலக்கியங்களில் எதிலேனும் உண்டா?" என கேட்டேன் "நான் 7