மார்க்க ஔரேலியன் சரித்திரம்
ஐரோப்பாக் கண்டத்தில் இத்தாலி என்ற ஒரு தேசம் இருக்கிறது. அதில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து அரசு புரிந்த சக்கரவர்த்திகளுடைய சாம்ராஜ்யம், மிக விசாலமானதாயும், பெரிதும் வலிமையுடையதாயும் இருந்தது. அதன் வடஎல்லை உலாந்தா முதல் ஹுங்காரியா உக்ரானியா வரையில் இருந்தது. கீழ் எல்லை பாரஸீகத்தையும், எகிப்தையும், அராபியாவையும் தொட்டது. எகிப்தினின்று மொராக்கோ வரையில் உள்ள வட ஆப்பிரிக்காப் பிரதேசங்களெல்லாம் அச் சாம்ராஜ்யத்தின் தெற்கு எல்லையாக விளங்கின. அதன் மேற்கெல்லை அட்லாந்திக் சமுத்திரமேயாகும். அது மாத்திரமில்லை : இங்கிலாந்துகூட அந்த ஏகாதிபத்தியத்தில் ஒரு மாகாணமாகவே இருந்தது, மத்தியதரைக் கடலை ரோமர்கள் தங்கள் வீட்டு ஏரி என்றே சொல்லிக் கொள்ளுவார்கள். அத்தனை விசாலம் அவர்களுடைய ஏகாதிபத்தியம்! அத்தனை செருக்கு அவர்களுடைய இதயத்தில் ரோம ஜாதியார் வீரத்திலும் நீதியிலும் சிறந்திருந்தார்கள். அத்தகைய