28
இதய
செய்யாதே. நீ மாத்திரம் நெறியினின்று ஒரு மயிரிழையேனும் பிறழாமல் நட.
20
“ மன அமைதி வேண்டுமானால் உன் வேலைகள் மிகச் சிலவாக இருக்கட்டும்” என்று ஒரு ஞானி கூறுகிறார். ஆனால் இது அதைவிட மேலான விதியாயிராதோ என்று யோசித்துப் பார்: அதாவது - “இன்றியமையாத காரியங்களை, பொது நன்மையைக் கவனிப்பதே இயற்கையாகவுடைய உன் நல்லறிவு கூறும் காரியங்களை மாத்திரம் அந்நல்லறிவு கூறும் முறையில் செய்வாய்”.-இதனால் வேலைகள் குறைவதால் வரும் அமைதியோடு அவற்றை நன்றாய்ச் செய்வதால் வரும் அமைதியும் கிடைக்கும். அனாவசியமான செய்கைகளைச் செய்யாமலிருப்பதோடு அனாவசியமான நினைவுகளையும் நினைக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில் அப்பொழுதுதான் அவசியமற்ற செய்கைகள் நிகழா.
21
எவனேனும் உனக்குத் தீங்கிழைக்கின்றானா? அவன் உண்மையில் உனக்குத் தீங்கிழைக்கவில்லை. தனக்கே தான் கேடு சூழ்ந்து கொள்கிறான்.
22
பிறன் கையை எதிர்பார்ப்பவன்தான் ஏழை. தன்
வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் தன் ஆத்மாவினுள்ளே சேமித்து வையாதவன் தான் வறிஞன்.
23
இப்பொழுது நிகழ்பவை இனி நிகழ்பவைகளுக்கு ஒருவிதத்தில் வித்தாகும்.
24