பக்கம்:இதய உணர்ச்சி.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

இதய


ரு காரியத்தைச் செய்து முடிப்பது உனக்குக் கஷ்டமாயிருந்தால் அது அசாத்தியமென்று நினைத்து விடாதே. மனிதனால் செய்யக்கூடிய, மனித இயல்பிற்கு ஒத்த எதுவும் உனக்கும் சாத்தியமே என்று நினை.

42

★ ★ ★

ன் எண்ணமோ அல்லது செய்கையோ தவறு என்று எனக்கு எவனாவது அறிவுறுத்துவானானால், நான் அத்தவறைச் சந்தோஷமாய்த் திருத்திக்கொள்வேன். ஏனெனில் நான் சத்தியத்தையே நாடுகிறேன். சத்தியம் யார்க்கும் எக்காலத்தும் துன்பம் தந்ததில்லை. குற்றத்திலும் அறியாமையிலும் வாழ்பவன்தான் உண்மையில் கஷ்டப்படுபவன்.

43

★ ★ ★

ன் கடமையை நான் செய்கிறேன், மற்றெதுவும் எனக்கு லட்சியமில்லை.

44

★ ★ ★

தேவர்களை வணங்கு, மனிதர்க்கு உதவி செய். வாழ்நாள் சொற்பம். உலக வாழ்வின் பயன் ஒன்றே, அதாவது பக்தி நிறைந்த மனமும் பொது நன்மைக்குரிய

செயலுமே.

45

★ ★ ★

மார்க்கன் என்ற நிலைமையில் என் ஊரும் தேசமும் ரோமாபுரி. மனிதன் என்ற முறையிலோ என் ஊரும் தேசமும் உலகமேயாகும். இவ்விரண்டுக்கும் பயன் தருவதுதான் எனக்கும் பயன் தருவதாகும்.

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/36&oldid=1105876" இலிருந்து மீள்விக்கப்பட்டது