35
உணர்ச்சி
உலகில் பேர் பெற்றவர்களும், பேர் பிறர்க்குத் தெரியாதவர்களும் முடிவில் மண்ணாகிவிட்டனர். அதனால் அவர்க்கு நேர்ந்த கேடு யாது? உண்மையும் நீதியும் கடைப்பிடித்து, பொய்யரிடத்தும் அநியாயஸ்தரிடத்துங்கூட அன்பு பாராட்டி வாழ்வதே உலக வாழ்வில் உயர்ந்த பயன் தருவதாகும்.
47
உனக்குச் சந்தோஷம் வேண்டுமென்று இருந்தால் உடனே உன்னுடன் வாழ்பவரின் குணாதிசயங்களைப் பற்றி நினை. ஏனெனில் நம்முடன் வாழ்பவரிடம் நற்குணங்கள் அதிகமாய் விளங்குமாயின், அத்தகைய நற்குண உதாரணங்களைப்போல் நமக்கு மகிழ்ச்சி தருவது வேறொன்றுமில்லை. ஆகையால் அவர்களை நாம் எப்பொழுதும் இதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
48
தேனீக் கூட்டத்திற்கு நன்மை தராதது தேனீக்கும் நன்மை தராது.
49
மனிதர்களைச் சந்தோஷப்படுத்தி நம் அபிப்பிராயப்படி நடக்கச் செய்ய முயல்வோம். ஆனால் நீதிமுறை அவர்களுடைய விருப்பத்துக்கு விரோதமாக நம்மை நடக்கச் சொன்னால், அப்படி அவர்களுக்கு விரோதமாகவும் நடப்போம். ஆயினும், யாரேனும் பலாத்காரத்தால் நம் காரியத்துக்குத் தடைசெய்தால்,