உணர்ச் சி
45
வாழ்கிறான் என்பதைக்கூடச் சொல்ல திறமிராது. அப்படியிருக்கத் தாங்கள் யாவர், உலகில் தங்கள் ஸ்தானம் என்ன என்று அறியாதவர்களுடைய புகழ்ச்சியை விரும்புபவனேப்பற்றி என்ன நினைப்பது?
78
பொதுவாக ஒரு மனிதனுடைய தீயொழுக்கத்தினால் உலகிற்கு யாதொரு கேடுமில்லை. முக்கியமாக ஒருவன் செய்யும் தீமை வேறொருவனைக் கெடுத்துவிடுவதில்லை. தான் செய்யாமல் நிறுத்திவிடக்கூடிய தீமையை எவன் நிறுத்தாமல் செய்கிறானோ அவனுக்குக்தான் அத்தீமை கேடு தருகின்றது.
79
மரணத்தை இகழாதே. இயற்கை அமைப்பில் நிகழும் காரியங்களில் அதுவும் ஒன்றென்று உணர்ந்து கொண்டு அதை ஏற்றுக்கொள். எப்படி இளமை, முதுமை, நரை மக்கட்பேறு முதலியன இயற்கையின் நிகழ்ச்சிகளோ அப்படியே மரணமும் இயற்கையின் நிகழ்ச்சியேயாகும். ஆதலால், கருப்பையிலிருந்து குழந்தை வெளிவருவதற்கு எப்படிக் காத்திருக்கிறோமோ அப்படியே நம் உடம்பிலிருந்து உயிர் வெளியே போவதற்கும் காத்திருக்க வேண்டும். அப்படிக் காத்திருப்பது அறிவாளிக்கு அடுத்ததே. அறிவாளிக்கு அடுக்காதது மரண சம்பந்தமாய் ஆத்திரப்படுதல், அல்லது அலட்சியமாயிருத்தல், அல்லது அதை இகழ்தல் இதுவேயாகும்.
79
மனிதர் செயலைக் கண்டு கோபமடைதல் ஒழுங்கன்று. அவர்க்குத் தீங்கு வராமல் காத்து அவர்