இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60
இதய உணர்ச்சி
டிருக்கிறாய்? செடிகளும், பறவைகளும், எறும்பும், ஈயும் அதற்கு ஏற்பட்ட வேலையைச் செய்யவில்லையா ? நீ மட்டும் ஏன் உன் இயல்பிற்கொத்ததும் மனிதன் செய்ய வேண்டியதுமான வேலையைச் செய்ய விரும்பாமல் பின்னடைகிறாய்?
119
என் தந்தையிடமிருந்து அடக்கமும் ஆண்மையும் அறிந்தேன்.
என் தாயிடமிருந்து பக்தி, பரோபகாரம், கெட்ட செயல்களும் கெட்ட எண்ணங்களும் நிகழாது காத்தல் செல்வருடைய வழக்கங்களை விட்டு ஆடம்பரமற்ற வாழ்வு வாழ்தல் முதலியன கற்றேன்.
120