பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 தியாகத் தங்கங்களின் தற்கொலைச் செயல் முறையைக் கழகம் ஏற்றுக் கொள்ளாவிடினும், அந்த மாணிக்கங் களின் மீது மாசு கற்பித்த மமதையாளர்களின் போக்கு கண்டு மனம் நெகிழ்ந்தோம்! அதே போலத்தான் சில நாட்கள் நான் சிறையில் அடைபட்டிருந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல் - என்றோ ஒரு நாள் விடுதலை ஆவேன் எனத் தெரிந்தும் பொறுத்துக் கொள்ள முடியாமல் -எழுவர் தீக்குளித்து இன்னுயிர் நீத்த போதும் அவர்கள் எடுத்த முடிவுக்கு ஏதேதோ இழிதகைக் காரணங்களைக் கூறி ஏடுகளில் செய்திகளைப் பரப்பினர்! எழுதினர்-பேசினர்! எவர்? யார்? அத்தகைய இதயமில்லா மனிதர்களாய் ஏகடியம் செய்தனர் என்பதற்குப் பழைய ஏடுகளே ஆதாரம்! ஆனால் நானும் சரி; நமது கழகமும் சரி-எந்தவொரு இயக்கத்தில் தன்னலமற்ற தியாகச் சுடர்கள் இருந் தாலும் அவர்களையோ-அவர்களது உணர்வுகளையோ- என்றைக்கும் மதிக்கத் தவறியதில்லை! இதேய தங்களின் அன்பிற்குரிய தலைவருக்காக- மேற்பட்ட என் இனிய நண்பருக்காக -பத்துக்கு உயிர் அ.தி.மு.க. உடன்பிறப்புக்கள், தங்களின் மீது பற்றற்றுத் தணல் பாய்ந்த மெழுகாகியிருக்கின் றனர் என்கிற போது... அய்யகோ! அவர்களின் பாசப் பிணைப்பை என்னவென்று புகழ்வது! தி.மு. கழக உடன்பிறப்புக்கள் மொழிக்காக ஒரு முறையும் - எனக்காக ஒரு முறையும் தீக்குளித்துச் செத்தபோது அந்த நாட்களில் விரசமாக விமர்சித்த பிரமுகர்களைப் போல ஆளுங்கட்சிப் விமர்சிக்கும் அரசியல் கீழ்த்தரம் எனக்கும் நமது கழகத்திற்கும் என் றைக்கும் ஏற்படாது! அது தான் நாம்! அதனால்தான் நாம்; நாமாக இருக்கிறோம்! உடன்பிறப்பே; உன்னை "உடன்பிறப்பே" என அழைக்கும் உரிமை எனக்கிருப்பது போலவே - அ.தி.மு.க. வின் அடித்தளத் தொண்டர்களை "உடன் பிறப்புக்களே!" என அழைக்கும் உரிமை எனக்கிருப்ப