பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13 தாக நம்புகிறேன்! அந்த நம்பிக்கையைச் சிதைக்கச் சில "நல்லவர்கள்" (?) முனையலாம்! அது குறித்து நான் கவலைப்படவில்லை! எல்லோரும் ஒன்றாக இருந்த அந்தக் காலத்தை மறந்து விடாத நிலையில் அ.தி.மு.க. செயல் வீரர்களை நான் "உடன்பிறப்புக்களே" விளிப்பதில் ஆச்சரியமுமில்லை! தவறுமில்லை! என எனவே, அந்த உடன்பிறப்புக்களை கேட்டுக் கொள் கிறேன்! "உடன்பிறப்புக்களே! உங்களுக்கு உங்களின் உயிரினும் சிறந்த தலைவன் மீது இருக்கின்ற அன்பின் பெருக்கை அறியாதவனல்ல நான்! அவர் உடல்நலி வுற்றுத் துன்புறும் செய்தியால் உங்கள் இதயம் எப்ப டித் துளைக்கப்படும் என்பதை உணர முடியும் என்னால்! பன்னிரண்டு ஆண்டுக் காலம் பகை மூட்டத்துக்கிடையே பிரிந்து நின்ற நானே.. ...பழைய பசுமையான தோழமைக் காலத்தை எண்ணி எண்ணி...துன்பச் சுமை தாங்காது தத்தளிக்கிறேன் என்கிறபோது; எந்தப் பதவியோ- பவிசோ பரிசோ எதையுமே நாடாமல் அவரை நெஞ்சில் குடியமர்த்தி வைத்திருக்கிற உங்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்! அந்தத் துடிப்பு ; அவர் முதலமைச்சராக இருக்கிறார் என்பதால் பயன் கருதி ஏற்படும் துடிப்பு அல்ல! பற்று பாசத்தால் ஏற் படும் துடிப்பு! அந்தப் பற்றும் பாசமும் அவர் நீண்ட ஆயுளுடன் நெடுங்காலம் வாழ வேண்டும் என வாழ்த்துவதற்குப் வேண்டுமேயல்லாமல் - உங்களை பயன்பட நீங்களே கருக்கிக் கொள்வதற்குக் காரணமாகி விடக்கூடாது! அவர் நலம் பெற்று வருகிறார் என்ற நல்ல செய்திகள்; அரசின் சார்பில் அறிவிக்கப்படுகின்றன! நான், இந்தக் கடிதம் எழுதும் நேரத்திலும் அமைச்சர் அண்டே அவர் கள் "முதலமைச்சர் உடல் நிலையில் மேலும் முன்னேற் றம்" என்ற செய்தியே தந்துள்ளார். அந்தச் செய்திகள் தொடரட்டும்! அவ்வாறு தொடர வேண்டுமெனத் தமிழகமே விழைகிறது!