பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 அதற்கிடையே நீங்கள் நெருப்பிட்டுக் கொண்டு மாள்கிறீர்கள் என்று நெஞ்சைக் குலுக்கும் தகவல்களால் என்னைப் போன்றோர் படுந்துயர் கொஞ்சமல்ல! உணர்வு மதிக்கத்தக்கது! வணங்கத்தக்கது! ஆனால் உயிரை வலுவில் போக்கிக்கொள்வது ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல! நீங்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்காக-நீங்கள் ஆற்ற வேண்டிய கடமை எவ்வளவோ இருக்கிறது! எந்தவொரு இயக்கத்திற்கும் அந்த இயக்கத்தின் தொண்டனே உயிர்நாடி! அந்த உயிர்நாடிகள் எந்தவொரு இயக்கத்திலும் அறுந்து போய்விடக் கூடாது? தொண்டனாகவே இருந்து வளர்ந்தவன் என்ற முறை யில் வேண்டுகிறேன்; தொண்டுள்ளம் கொண்ட தியாக உடன்பிறப்புக்களே! உங்கள் உயிர்ப்பலியை நிறுத்துங் கள்! உங்கள் தலைவர்-எனது நண்பர்; நலம் பெற்று எழுந்துவர - நாமனைவரும் சேர்ந்து வாழ்த்துவோம்!" உடன்பிறப்பே, இந்த வேண்டுகோளைத்தான் உன் னுடன் இணைந்து அ.தி.மு.க. உடன்பிறப்புக்களுக்கு விடுக்கிறேன். அன்புள்ள, மு.க.