பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 கொண்டிருக்கிறார். இந்தப் பூரிப்பு வழியும் புகைப்படம் தமிழ்நாட்டில் வெளிவரும் நாளேடுகள் கடந்த இரண்டு மூன்று பட்டுள்ளன. நாட்களாகப் பலவற்றில் பிரசுரிக்கப் திடீரென்று டெல்லியில் உள்ள மத்திய நிதி அமைச்ச ருக்கு நமது மாநில நிதியமைச்சர் மாலை அணிவித்து மகிழ வேண்டிய நிகழ்ச்சி என்ன ஏற்பட்டுவிட்டது? ஏதாவது தமிழகத்திற்கு புதிய திட்டத்தை அறிவித்து அதற்காகப் பல கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் அறி வித்து - அந்த நல்ல செய்தி கேட்டுத் தமிழக அரசின் சார்பாக மத்திய நிதி அமைச்சருக்கு நமது மாநில நிதி அமைச்சர் நன்றிப் பெருக்குடன் மாலை அணிவித்துப் போற்றிப் புகழ்பாடுகிறாரா? அப்போது எடுக்கப்பட்ட படமா? அல்லது; பொதுத் தேர்தல் முடிவுற்று பாராளுமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் பிரணாப் என்ற செய்தி கேட்டு; அதற்காக அவரைப் பாராட்டுவதற்கு நாவலர் அவர்கள் மாலை அணிவித்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளாரா? அப்போது புகைப்படமா? ஒருவேளை - டெல்லிக்குச் "கிளிக்" செய்யப்பட்ட சென்ற நாவலரிடம்; பிரணாப் முகர்ஜிக்குப் பிறந்தநாள் விழா என்பதை யாரா வது நினைவூட்டி-அதன் காரணமாக அவரை அலுவல கத்தில் சந்தித்து மாலை அணிவித்து அகமிக மகிழ்ந்து இன்ப வெள்ளத்தில் மிதக்கும்போது எடுக்கப்பட்ட நிழற் படமா? இல்லை, இல்லை, உடன்பிறப்பே-இவை எதுவுமே இல்லை! முதலமைச்சர் உடல்நலிவுற்றிருப்பதை முன்னிட்டு; தமிழக ஆளுநர் குரானா அவர்கள் முதல்வரின் இலாக்காக் களை அனைத்தையும் கடந்த 25 ஆம் தேதி அன்று நாவல ரிடமே ஒப்படைத்துவிட்டார் அல்லவா ; அந்தக் காரியம் நடைபெற்ற அடுத்த விநாடியே நிதியமைச்சர் நாவலர் அவர்கள் டெல்லிக்குப் புறப்பட்டு விட்டார்.