________________
அண்ணா உடல்நலிவுற்றிருந்த போது அவரது இலாக் காக்கள் அண்ணாவே கோப்பில் கையெழுத்திட்டு, மூன்று நான்கு அமைச்சர்களிடத்திலே பிரித்துத் தரப்பட்டன. அருமை நண்பர் எம். ஜி. ஆர். அவர்கள் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்றிருந்த போது கூட அவரது இலாக்காக்களை அவரே பகிர்ந்து இரண்டு மூன்று அமைச்சர்களுக்குத் தற்காலிகமாக அளித்து அவரே கோப்பில் அந்த ஆணையை இட்டு கையெழுத்துப்போட்டுதான் சென்றார். ஆனால் இப்போது மருத்துவமனையில் கடந்த 10ஆம் தேதியன்று கூட கோப்புகளை முதல்வர் பார்வையிட்டுக் கையெழுத்திட்டார் எனச் சட்ட சபையில் நாவலரே தகவல் தந்துள்ள நிலையிலும் கூட, முதல்வர்- தனது இலாக்காக்களை நாவலருக்குத் தற்காலிகமாக ஒப்படைப் பதாக ஒரு கோப்பிலும் எழுதவில்லை. ஆனால் அதற்கு மாறாக ஒன்பதாம் தேதி வாய்மொழியாக அந்த இலாக்கா மாற்றத்தை முதல்வர் அவர்கள் நாவலரிடம் கூறி விட்டாராம்! இப்படி நாவலரே சொல்கிறார்! பத்தாம் தேதி "பைல்" பார்த்துப் "பைசல்" செய்யக் கூடிய நிலையில் இருந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர் கள், ஒன்பதாம் தேதி வாய்மொழியாகச் வேண்டிய அவசியம் என்ன? சொல்ல டெல்லியின் ஆலோசனைப்படி கவர்னர் இப்படி யொரு முடிவை எடுத்து- ஒரு புதிய அதிகாரத்தை கவர் னரின் கையில் தமிழக ஆட்சியாளர்கள் வலுவில் கொண்டு போய் வழங்கியிருக்கிறார்கள். முதல்வருக்கோ நமது நெஞ்சு நெகிழத்தக்க அளவுக்குத் திடீரென பக்கவாத நோயினால் பேசும் சக்தி இழந்துள்ள நிலை! கையெழுத்தும் போட முடியாமல் கையை அசைக்கும் சக்தியை இழந்துள்ள நிலை! அதாவது 13ந் தேதிக்குப் பிறகு! இப்படிப்பட்ட ஒரு அசாதாரண சூழலில் மாநிலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய நிர்வாகப் பணிகளுக்காக வேறு என்னதான் செய்ய முடியும் எனக் கேட்பது எனக்குப் புரிகிறது! 17