________________
18 சுலபமான ஜன நாயக வழி ஒன்று இருக்கிறதே! ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, முதல்வர் உடல் நலம் பெறுகிற வரையில் தற்காலிகமாக அவரது இலாக்கா பொறுப்புக்களை இந்த அமைச்சர் பகிர்ந்து கொண்டு பார்ப்பதற்கு சட்டமன்ற ஆளுங் கட்சி உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கவர்னருக்குப் பரிந்துரை செய்கிறது என்று ஒருவர் பெயரைக் குறிப் பிட்டுத் தீர்மானம் நிறைவேற்றி அதனைக் கவர்னரிடம் கொடுத்து அதன் வாயிலாக ஜனநாயக நெறியையும் காப்பாற்றி - மாநில உரிமையையும் பாதுகாத்துக் கொண்டிருக்க முடியுமே! இந்த என் கருத்தும் சிந்திக்கக் கூடிய ஒன்றுதானே! இப்படி எதுவுமே முறைப்படி சிந்தித்து நடத்தப் படாமல் - முதல்வர் அவர்கள் வாய்மொழியாக ஒன்பதாம் தேதியே சொல்லி விட்டார் என்று ஒரு கற்பனைக் கதை யைக் கட்டி, கவர்னர் மூலமாக முதலமைச்சரின் எல்லா இலாக்காக்களையும் நாவலர் தன்னகப்படுத்திக் கொண் டது; அவரது ராஜதந்திரத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லவா? அதற்கு ஆசி வழங்கி, அருள்பாலித்த டெல்லி பேரரசின் பிரதானியர்களில் ஒருவரான பிரணாப் முகர் ஜிக்கு நன்றி தெரிவித்து-மாலை சூட்டி-மகிழ்ச்சிப் பெருக் கில் நாவலர் ஆழ்ந்திருப்பது ஆச்சரியமல்லவே! உடன்பிறப்பே, எத்தகைய நேரத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு என்பதைக்கூட சிந்தித்திட நாவல் ருக்கு நேரமில்லை! கட்சி வேறுபாடுகளை மறந்து கண்ணீர் மல்கிட தமிழகத்து மக்கள் அனைவரும் முதல்வரின் உடல்நலம் பெற வேண்டுமென வாழ்த்திக்கொண்டிருக்கிற சமயம்! பதவி பவிசு அதிகாரம் - அந்தஸ்து எதையுமே தங்கள் தலைவனிடம் எதிர்பாராமல் அவரிடத்தில் பாசங் கொண்ட அவரது கட்சியின் உடன்பிறப்புக்கள் அவர் நலம் பெற வேண்டுமென்பதற்காகத் தீக்குளித்துச் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.