________________
பசி உறக்கம், ஓய்வு அனைத்தையும் மறந்த தொண்டர்கள் - அவர் உடல்நிலை குறித்து அறிந்திட அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள்! இந்தச் சோகம் கப்பிய சூழ்நிலையில்தான் - அதுவும் * முதல்வரின் உடல்நிலையில் நெருக்கடியும், சிக்கலும் ஒவ் வொரு நிமிடமும் எதிர்பார்க்கப்பட்ட நாளில்தான் - முதல்வரின் உடல்நிலை எவ்வாறுள்ளது என்ற முழு உண்மையையும் அறிந்து கொள்ளக்கூடிய இடத்திலே இருக்கிற நாவலர் அவர்கள் டெல்லிக்குச் செல்கிறார்! இலாக்காக்கள் தன்பால் வந்துவிட்டன என்ற இனிய செய்தியை வெளியிட்டுவிட்டு -- அந்த வாய்ப்பு வழங்கிய வடபுலத்துக்காரர்களுக்கு நன்றி கூறி மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்! பிரதமருக்கும் மற்றவர்களுக்கும் மாலை அணிவித்த நிகழ்ச்சிகள் எல்லாம் படமாக வர வில்லை! பிரதமர் அலுவலகத்தில் அடிக்கடி புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை! பிரணாப் முகர்ஜிக்கும், ஆர். வெங்கட்ராமனுக்கும் ஜவ்வாது மாலைகள் அணிவித்த போது பிரதமருக்கு அணிவிக்காமல் இருந்திருப்பாரா? ஆனால் பிரதமர் இங்கே முதல்வரைக் காண வந்த போது தனக்கு யாரும் மாலை அணிவிப்பதைத் தவிர்த்து விட்டார். எனது சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் தென் ஆற்காடு மாவட்டத்தில் நடைபெற்ற போது எனக்கு யாரும் மாலை அணிவிக்கக் கூடாது என அறிக்கையே விடுத்தேன். தற்காலிகமாக - மு தல்வரின் இலாக்காக்களை; டெல்லி அரசின் கடைக்கண் பார்வை-கவர்னரின் கருணாகடாட் சம் - இவற்றின் காரணமாகப் பெற்றுக்கொண்டதற்கே இத்தனைப் பேரானந்தமா? மருத்துவமனையிலே முதல்வர் நடத்துவது உயிருக் குப் போராட்டம்! மேலிடத்தில் கொண்டாட்டம்! உள்ள இவர்களுக்கோ மகிழ்ச்சிக் உடன்பிறப்பே! இவர்கள் இயல்பு இதுதான் என்பது உனக்கும் எனக்கும் முன்பே தெரியும்! அ. தி. மு.க.வில் உள்ள உணர்ச்சியுள்ள உடன் பிறப்புக்கள், இவர்களை வேண்டுமென்பதற்காக அவ்வளவுதான்! அடையாளம் கண்டுகொள்ள இதனைக் குறிப்பிட்டேன்- அன்புள்ள, 19 மு.க.