பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நெஞ்சில் இருந்ததைக் கொட்டி விட்டேன்! உடன்பிறப்பே! தேர்தலுக்கான ஆயத்தங்களும்-- அந்த ஆயத்தங் கள் குறித்த அறிவிப்புகளும் வந்தவண்ண மிருக் கின்றன. அதிபர் ஆட்சி முறையா- அல்லது நாடாளு மன்றத்தின் ஆயுள் நீட்டிப்பா-அல்லது உரிய காலத்தில் தேர்தலா- என்ற கேள்விகளுக்கு மழுப்பலான பதில் களையே பெற முடிந்த நிலைமை மாறி; இப்போது தேர்தல் வந்தே விட்டது என்ற செய்திகள் வரத் தொடங்கி விட்டன. நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலும் இணைந்து வருமா என்பது இன்னமும் உறுதி யாக்கப்படவில்லை. ஆனால் இணைத்தே நடத்த வேண்டு மென்பதில் நாவலர் அவர்களும் இன்னும் சில அமைச்சர் களும் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இரண்டு தேர்தலும் சேர்ந்து வந்தாலும் நாம் சந்திக் கத்தான் போகிறோம். அதற்கும் தயாராகவே இருக் கிறோம். ஆனால் என் உள்ளத்தில் உறுத்திக்கொண்டிருக்கிற ஒரு உணர்வை என்னால் வெளியிடாமல் இருக்க முடிய வில்லை. தர்மபுரி மாவட்ட சுற்றுப்பயண நிகழ்ச்சியின் போது கூட அதனைக் குறிப்பிட்டேன். முதலமைச்சர்--எனது இனிய நண்பர் எம். ஜி.ஆர். அவர்கள் மிகவும் உடல்நலிவுற்று அமெரிக்க நாட்டில் நியூயார்க் மருத்துவ மனையில் படுக்கையிலிருக்கிறார் என்கிற போது அவர் தமிழ்நாட்டில் இல்லாத நேரத்தில்- அதுவும் நோயுற்று வெளிநாட்டில் வாடிக் கொண்டிருக் கும் போது - அதனையே முதலீடாக வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென்று ஆளுங்கட்சியில் உள்ள C