________________
ஏற்றுக் கொள்ளவும் 21 முடியவில்லை! சிலர் முனைவதை எடுத்துச் சொல்லாமலும் இருக்க முடியவில்லை! உடன்பிறப்பே, சில நாட்களுக்கு முன்பு "நானும் பிரார்த்தனை செய்கிறேன்" என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தை உன்னிப்பாக-ஒவ்வொரு வரியாகப் படித் திருப்பாய் என்று நம்புகிறேன். அதில்:- செய்து "நான் நடக்கும் வழிதான் நல்வழியென்று வாதம் மோதிக்கொள்வதிலே கூட ஒரு சுவையுண்டல்லவா நம் இருவருக் கும்; அதற்காகவும் நீங்கள் நலமுடன் திகழ வேண்டுமென்றுதானே இந்த நண்பனின் இதயம் ஏங்கிக் கொண்டிருக்கும்! என் என்று நான் எழுதியிருந்த அந்த வாசகம், கண்ணீரால் எழுதப்பட்டது என்பதை அந்தக்கடிதத்தை எம்.ஜி.ஆர். படிக்கும் நிலையில் இருந்திருந்தால் நிச்சய மாக உணர்ந்துகொண்டிருப்பார்! நின்று: 1971ல் நானும் எம். ஜி. ஆரும் இணைந்து ஆம் - நமது இயக்கம் டில்லிக்காரர்களால் பிளவுபடுத்தப் படாமல் ஒரே இயக்கமாக இருந்து தேர்தல் களங்கண்டு தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 184 சட்ட மன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது! 1977ல் அப்போது நானும் அவரும் ஒருமுனையில்! அவரும் நானும் எதிர்எதிர் முனைகளில்! ஏன்? எப்படி? யாரால்? இப்போது விளக்க விரும்பவில்லை! 1972ல் அச் சேறிய ஆதாரங்கள் சாட்சியங்களாக இருக்கின்றன! தேவைப்படும் போது தெரிவிப்பேன! 1977ல் அவர் வென்றார்! 1980ல் நாடாளுமன்றத் தேர்தல்-மீண்டும் களம் கண்டோம்; அப்போதும் எதிர்எதிர் முனைகளில்தான்! அவரை வெற்றி கண்டோம்! அதுவும் மிகப்பெரிய வெற்றி! அடுத்து சட்டமன்றத் தேர்தல்-களத்தில் இருமுனை களில் நின்றே மோதிக் கொண்டோம் மீண்டும் அவர் பெரு வெற்றி பெற்றார்!