பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

யுடன் மோதப்போகிற எதிர் அணியின் தலைவர் களத்தில் இருக்க மாட்டார் என எண்ணுகிறபோதும் - அவர் நோயுற்ற நிலையில் இருப்பார் என நினைக்கிற போதும் " நம் "மோதிக்கொள்வதிலேகூட ஒரு சுவையுண்டல்லவா இருவருக்கும்; அதற்காகவும் நீங்கள் நலமுடன் திகழ வேண்டுமென்று தானே இந்த நண்பனின் இதயம் ஏங்கிக் கொண்டிருக்கும்!' என்று நான் கடிதத்தில் குறிப்பிட்ட அந்தக் கருத்து எத்துணை உணர்வுபூர்வமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? தேர்தலுக்குள் அவர் உடல்நலம் பெற்று களம் புகுந்து பணிகளையாற்றுவார் என்று நிச்சயிக்க முடியாத நிலையில் - டாக்டர்களும் அத்தகைய உத்திரவாதம் எது வும் வழங்காத நிலையில்-சட்டமன்றத் தேர்தல் களத்தை இப்போது நினைத்துப் பார்க்கும்போதே ஏதோ ஒரு இனந் தெரியாத வேதனையால் இதயம் கனத்துப் போகிறது. ஆனால் நாவலரும் அவரைச் சார்ந்தோரும் இப் போதே அந்தத் தேர்தலும் நடைபெற வேண்டும் - அவர் உடல்நலம் பெற்று வந்த பிறகு முறைப்படி ஜூன் மாதத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்தக் காத்திருக்கத் தேவையில்லை என்ற முடிவில அழுத்தமாக இருக்கிறார்கள் என்றே தெரிகிறது! என்னைப் பொறுத்தவரையில் -சட்டமன்றத் தேர்த லுக்கு எனது இனிய நண்பர் எம். ஜி. ஆர். உடல்நலம் பெற்று வந்து அவரைத் தேர்தல்களத்தில் சந்திப்பதையே பெருமையாகக் கருதுகிறேன்! 66 “அதற்காக ஜூன் மாதம் வரையில் நாங்கள் பொறுத் திருக்க வேண்டுமா? எங்கள் நிலைமை என்ன ஆவது? அவரது உடல்நலிவை பயன்படுத்தியே நாங்கள் லாபம் பெற எண்ணுகிறோம்!" என்று ஆளுங்கட்சி வட்டாரத்திலே உள்ள முக்கிய பிரமுகர்கள் பிடிவாதமாக இருப்பார்களேயானால்-இப் போதே தேர்தல் இணைந்துதான் வரும்! நெஞ்சில் இருந்ததைக் கொட்டி விட்டேன்! பின்னர் உருவாகும் நிலைமைகளுக்கேற்ப - நமது வியூகங்களையும் வகுக்க வேண்டியதுதானே! 23 அன்புள்ள, மு.க.