பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2.6 ஆனால்-எனக்கு; ஆம்-ஒருவரிடம் ஒருவர் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் நாற்பதாண்டு காலம் பழகி னோமே; அந்த நண்பனுக்கு நீங்கள் உடல் நலிவுற்றுள்ள நிலையில் உங்களைக் காணும் வாய்ப்புகூட மறுக்கப்பட்டு விட்டது! 1969ல் நான் முதலமைச்சர் பொறுப்பேற்று - சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முடித்துவிட்டு வெளியே புறப்படும்போது என்னை அப்படியே கட்டித் தழுவி என் நெற்றியில் முத்த மிட்டீர்கள்! இடையில் கழகம் பிளக்கப்பட சில துரோகிகளின் முயற்சி வெற்றி பெற்று-அப்போதும் திராவிடர் இயக்கம் முற்றிலும் அழிந்து விடாமல்- நீங்கள் ஆளுங்கட்சித் தலைவராகவும் நான் எதிர்கட்சித் தலைவராகவும் எதிர் எதிரே அமர்ந்திருந்த போதும் - நாம் கடுமையாக மோதிக் கொண்ட போதும் - நம்முடைய தனிப்பட்ட கனிவான நட்பு; கடுகளவும் குறையாமலேதான் இருந்தது! இன்றும் இருந்து வருகிறது! எனக்குத் தங்களை ஆனாலும் மருத்துவமனையில் தொலைவில் இருந்துகூடப்பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. 99 பார்த்தால் "இன்பெக்ஷன்” வந்துவிடும் என்று ஒரு சாக்குச் சொல்லி விட்டார்கள்! "இன்பெக்ஷன் எதுவும் வராமல், உற்ற நண்பர்கள் பார்ப்பதற்கு எத்தனையோ தடுப்பு ஏற்பாடுகள் மருத்துவத்துறையில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். மருத்துவமனையில் தங்கள் அறையிலேயே பணியாற்றிய சிப்பந்திகளும் மனிதர்கள் தானே! அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகூட எனக்குக் கிட்டவில்லை! 'சீட்டு வாங்க மூப்பனார் என் வீட்டு வாசலில் காத் திருந்தார்" என்று ஒருமுறை கூட்டத்தில் பேசினீர்கள். அது பத்திரிகைகளில்கூட வந்திருந்தது. ஆனால் அந்த மூப்பனார் அவர்கள்கூட உங்களை வந்து மருத்துவமனை யில் நரசிம்மராவுடன் பார்க்க முடிந்தது. ஆனால் வீட்டுக்கு வரும்போதெல்லாம் எதிர்கொண்டு அழைத்து-விடைபெற்றுக் கொண்டு புறப்படும்போது பின்னாலேயே வந்து வழியனுப்பி வைப்பீர்களே; அந்த நண்பனாகிட எனக்கு உங்களைச் சுற்றியிருந்தோர் உங் களைக் காண அனுமதி மறுத்து விட்டனர்! உங்களை அமெரிக்கா கொண்டு செல்லும்போது எடுக்கப்பட்ட படங்களை இந்து" ஏட்டில் அங்கே 66