________________
கண்டபோது என் கண்கள் நீர்வீழ்ச்சிகளானதை என் அருகிலிருந்த நண்பர்கள் மட்டுமே அறிவார்கள்! உங்களை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றிருப் பதே - உங்கள் உயிரோடு விளையாடுகிற உன்மத்தர்கள் சிலரின் செயல்தான் என்பதை என்னால் உங்கள் கட்சி உடன்பிறப்புக்களுக்குச் யின் முடியவில்லை! சொல்லாமல் இருக்க நான் இப்போது சொல்வது உண்மைதான் என்பதை -எதிர்காலத்தில் அந்த உடன்பிறப்புக்கள் தெரிந்து கொள்ளத்தான் போகிறார்கள். இதைத் திரும்பத் திரும்பச் சொல்வதற்கு காரணம்; உங்கள் உடல் இருக்கும் நிலையில் உங்களைச் சித்ரவதை செய்யும் கொடுமையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உங்கள் மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டதின் விளை வாக நீங்கள் சிந்திக்கும் சக்தியையே இழந்திருக்கிறீர் கள்! அய்யோ! இதனைச் சொல்லவே - நினைக்கவே வேதனையாக இருக்கிறது! உங்கள் வலதுகையும் வலது காலும் அசைவற்று இருக்கின்றன! சிறுநீரகம் பழுதுபட்டதால் அடிக்கடி ரத்தத்தில் உப்பு அதிகரிக்கிற பேரபாயம் ஏற்படுகிறது. அதனை உடனுக்குடன் “டயாலிசிஸ்" செய்துதான் சுத்திகரிக்க வேண்டியிருக்கிறது! ஆபரேஷன் செய்து சிறுநீரகத்தை மாற்றி வைக்கிற முயற்சியானால் உயிருக்கு உடனடி ஆபத்து விளைந் தாலும் விளையுமென்று பிரபல டாக்டர்கள் கருதுகிறார் கள். சிந்திக்கும் சக்தியில்லை! பேசும் சக்தியில்லை! வலது கையை அசைக்கும் சக்தியில்லை! “பிளட் யூரியா" எனும் பேராபத்து தொடர்கிறது! இந்த நிலையில் நீங்கள் உடல் நலம் பெற்று வரும் வரையில் காத்திருந்து உரிய காலமான ஜ ன் மாதத் தில் சட்டமன்றத் தேர்தலை நடத்தலாம் எனறு நான் கருத்து தெரிவித்தேன்! ஆனால், ஆதாயம் தேடிகளுக்கு என்ன அவசரம் பாருங்கள்! 27