பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நீங்கள் எழுந்து நடமாடினால்-பேசினால் சிந்திக்கும் சக்தி பெற்று செயலாற்றினால்; நம் இருவரது தாய்களின் மீதும் - நமது அண்ணாவின் மீதும் ஆணையாகச் சொல் கிறேன்; அது கேட்டு என்னைப் போல் மகிழ்ச்சி அடை பவர் யாரும் இருக்க முடியாது! இல்லையா நண்பரே! இதனை நல்லவர்கள்- நம்மை உணர்ந்தவர்கள்-யாராவது மறுக்க முடியுமா? பன்னிரண்டு ஆண்டுகால பகைமூட்டத்திற்கு இடை யிலேதானே இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை யில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நாம் இருவரும் சந்தித்தபோது கட்டித் தழுவிக் கொண்டோம்! அந்த அன்பையும் பாசத்தையும் அணை போட்டுத் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் முடியாது! தடுக்க முடியுமா? முடியவே எனவே எனக்கிருக்கிற ஆதங்கமெல்லாம்-உடல் நலிந்தும், மெலிந்தும், வதங்கி வாடியிருக்கிற உங்களை உயிர் பிழைத்து வரச் செய்கிற முயற்சிகளில் காட்டுகிற அக்கறையை விட-அவசர அவசரமாகத் தேர்தலை நடத்தி ஆதாயம் பெறுவதில் அதிக அக்கறை க கிறார்களே-என்பதுதான்! காட இன்று மறைக்கப்படுகிற உண்மைகள், நாளைக்கு விசுவரூபம் எடுத்து வெளிப்படும்போது அதன் விளைவு களை தாங்கிக் கொள்ள யார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் நான் தொடர்ந்து எழுப்பி வருகிற கேள்வி! உங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் உங்கள் அன்புத் தொண்டர்களை, இங்குள்ள உங்கள் கட்சியின் மேலிடத்தினர் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்திற்கு நான் ஆளாகி யிருப்பது எனது கடமை! இந்தக் கடமை உணர்வை இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் அனைவரும் புரிந்து கொள்ளத்தான் போகிறார்கள். இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்காது! கிடைத்தாலும் இயலாது! உங்களால் படிக்க இப்போது எனினும் என் உள்ளத்தில் உள்ளதை ஒ கைாமல் உரைத்து விட்டேன்! 29 என்றும் உங்கள் நண்பன், மு.க.