பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானும் பிரார்த்தனை செய்கிறேன் ! என் இனிய நண்பரே!

உங்களுக்காக-உங்கள் உடல் நலிவு நீங்குவதற் காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு ஆளுநர் அவர் கள் வேண்டுகோள் செய்தி விடுத்துள்ளார்! பல்வேறு தெய்வங்களின்பால் பக்தி கொண்டோர் நீங்கள் நலம் பெற்று எழ பிரார்த்தனை நடத்துகிறார்கள்! உங்கள் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ள கட்சித் தோழர்கள் - முன்னணியினர்-ஆலயங்கள் பல சென்று உங்களை மீண்டும் நலமுடன் காண வேண்டுமென பிரார்த்தனை நடத்துகிறார்கள்! பிள்ளைப்பிராய முதலே அந்த நம்பிக்கையில்லாமல் பெரியார் வழியில் அண்ணா வழியில் வளர்ந்துவிட்டவன் நான்! அதனால் நான் உங்களுக்காக தெய்வங்களிடம் கையேந்தி வரம் கேட்டுப் பயனில்லை கிறவன்! அது என் கொள்கை! என்று கருது அப்படியொரு கொள்கையிலே உறுதிப்பாடு கொண் டவன் என்பதற்காக உங்களுக்காக மற்றவர்கள் நடத் தும் பிரார்த்தனையைக் குறைகூறமாட்டேன்! அவர்களது பிரார்த்தனை நம்பிக்கை பலித்து நீங்கள் பிழைத்தெழுந்து நடமாடுவீர்களேயானால் எனக்கேற் படும் மகிழ்ச்சி-பிரார்த்தனை நடத்துகிறவர்களுக்கு ஏற் படும் மகிழ்ச்சிக்கு எந்த வகையிலும் குறைந்ததாக இருக் காது என்பதை எனக்கு உணவு பரிமாறிய உங்கள் தாயும், உங்களுக்கு உணவு பரிமாறிய என் தாயும் இப் போது உயிரோடிருந்தால் நிச்சயமாக நெஞ்சாரச்சொல்லி நெகிழ்ந்து போவார்கள்.