பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 கொள்ள மாட்டோம்! எத்தனையோ மாறுபாடு - எத்தனையோ வேறுபாடு- எப்படியோ முளைத்து விட்டன! ஆனால் இந்தப் பனிரெண்டு ஆண்டுப் பகையை- நாற்பதாண்டு கால நட்பு; பனிக்கட்டி போல இன்று கரைத்து விட்டதற்கு அடையாளம்: உங்கள் நோய் பற்றிக் கேள்விப்பட்டவுடன் என் கண்கள் அருவிக ளானதுதான்! அந்த அருவியில் கருத்து மாறுபாடுகள் கரைந்து போகவில்லை! ஆனால் கசப்பு உணர்வுகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன! மூதறிஞர் ராஜாஜியின் உடல் நிலையைக் கேள்வி யுற்று மருத்துவமனைக்கு வந்த பெரியார் அப்படியே ஆடிப்போய் விடவில்லையா? அந்தப் பெரியார் வளர்த்த குடும்ப பாச உணர்வும் அரசியல் பண்பாடும் பட்டுப்போய்விடுமா என்ன? அரசியலில் நீங்களும் நானும் முப்பது ஆண்டுகள் இணைந்து இருந்தோம்- அதில் இந்தப் பனிரெண்டு ஆண்டுகளாகப் பிரிந்தும் இருக்கிறோம்! ஆனால் அந்த 1953ஐ மறக்க முடிகிறதா? கல்லக்குடி போராட்டத்தில் ஆறுமாத சிறைவாசமேற்று திருச்சி சிறையிலிருந்து விடுநலையாகி சென்னை எழும்பூர் ரயிலடி யில் நான் வந்திறங்கிய போது மக்கள் வெள்ளத்தில் அமிழ்ந்து போக இருந்தேன்! அன்று என்னைக் "காக்கும் கரங்களாக" உங்கள் கரங்கள்தானே நீண்டன! என்னை. வாரி அணைத்துத் தோளிலே தூக்கிக் கொண்டு மக்கள் கடலைக் கடந்தீர்கள்! அப்போது விலை உயர்ந்த உங்கள் கைக்கெடிகாரம் அந்தக் கூட்டத்தில் போன தெரியவில்லை! இடம் அம்மவோ; அதையெல்லாம் நினைத்தால்- அதுவும் இந்த நேரத்தில் நினைத்தால்; நீங்கள் நலம் பெற வேண்டு மென்பதைத் தவிர என் உள்ளமும் உதடுகளும் வேறு எதனை உச்சரிக்கும்!